search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்திக்கு மாறும்"

    • ரயான் நூல், துணி விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
    • இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ரயான் துணிகள் உற்பத்தியும், அதை மதிப்பு கூட்டிய துணிகளாக மாற்றி விற்பனை செய்வதும் அதிகம்.

    அடுத்தபடியாக காட்டன் பாலீஸ்டர் துணிகளை உற்பத்தி செய்கின்றனர்.சமீப காலமாக இத்துணி களை டையிங், பிளீச்சிங், பிராசசிங், பிரிண்டிங் செய்து முழுமையான ஆடையாக மாற்ற தேவையான அளவு பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி இப்பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

    இதனால் செலவு அதிகரிப்பதுடன் ரயான் நூல், துணி விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:

    ஈரோடு, நாமக்கல் மாவட்ட பார்டர் பகுதியில் முழு அளவில் ரயான் துணிகள் உற்பத்தி ஆகி வந்தது. அவற்றை மதிப்பு கூட்ட செய்யும் சாய, சலவை, பிரிண்டிங், கேலண்டரிங் உள்ளிட்ட பணிகளுக்கான வசதி இங்கு குறைவு.

    வெளிமாநி லங்களுக்கு அனுப்பி திரும்ப பெற செலவு அதிகமாகிறது.எனவே கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்றனர்.

    குறிப்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம், ஆவத்திபாளையம் தார்காடு, வெளியரசம் பாளையம், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்ற–னர்.

    ரயான்நூல், உற்பத்தி கூலி, ரயான் துணிகளை மதிப்பு கூட்டிய பொருளாக்க ஆகும் செலவை விட கேரளா சேலைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 ரூபாய்க்கு மேல் குறைவு.

    5 அல்லது 5.5 மீட்டர் கேரளா சேலைக்கு ஜருகை பார்டர் துணி 10 ரூபாய்க்குள் வாங்கலாம்.

    ஒரு மீட்டர் உற்பத்திக்கு 40 ரூபாய் என 5 மீட்டருக்கு 200 ரூபாய்க்குள் அடக்க–லாம். 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 50 முதல் 100 ரூபாய் லாபம் நிற்கும். இதை மொத்தமாக செய்யும் போது வியாபாரிகளுக்கு சற்று குறைந்த விலையில் வழங்கலாம்.

    இவற்றுக்கு சாய பிரிண்டிங் பணிகள் குறைவு. கிரே துணியாக ஒட்டி டை பயன்படுத்தாமல் தேவையான நிற ஜருகை பார்டரை இணைத்து விற்கலாம்.

    தவிர பிற துணிகளை விட கேரளா சேலைகளுக்கு தற்போது ஆர்டர் அதிகம் வருவதால் அதனை உற்பத்தி செய்ய விசைத்தறியாளர்கள் விரும்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×