search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமத்துவப் பொங்கல் விழா"

    • ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
    • அனைத்து ஊராட்சிகளிலும் நாளை(வெள்ளிக்கிழமை) சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நாளை(வெள்ளிக்கிழமை) சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிகழ்வில் ஊராட்சியின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    ஊராட்சிகளில் பணி–யாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் போன்ற ஊராட்சியின் அலுவலர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கலைநிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி வெற்றி பெற்றோரை பெருமைப்ப–டுத்தப்பட உள்ளது.

    சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி கோலப்போட்டி. குழுப்பாட்டு, நாடகம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளது.

    மேலும், அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அனைவரும் பொது இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் சமத்துவ உறுதி மொழியினை எடுத்துக் கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×