search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.6.60 கோடி"

    • இந்த சாலை விரிவாக்க பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை குமலன்குட்டை பகுதியில் நடைபெற்றது.
    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை சாலை விரிவாக்க பணி

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக ரூ.6.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சாலை விரிவாக்க பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை குமலன்குட்டை பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர்சு. முத்துசாமி தலைமை தாங்கி சாலை விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது நெடுஞ்சாலை துறை சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை சாலை விரிவாக்க பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ.6.60 கோடி மதிப்பில் நடைபெறு–கிறது. இந்தப் பணி விரைந்து முடிக்கப்படும்.

    இங்கு வரும் தண்ணீரை காரணம் முதலில் அதிகாரிகள் சொல்வது முதலில் காலியிடம் இருந்ததால் தண்ணீர் அங்கு போய் தேங்கி நின்றது. தற்போது கட்டிடம் வந்து விட்டதால் ரோட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தண்ணீரை வெளியே எடுத்து செல்வதற்காக சாக்கடை தண்ணீராக இருந்தாலும் சரி, மழை நீராக இருந்தாலும் சரி அதற்கான கழிவு நீர் கால்வாய் வசதி செய்யப்படுகிறது.

    இவை முழுமையாக செய்யப்பட்டு அருகில் ஒரு ரோடு உள்ளது .அந்த ரோடு வழியாக தண்ணீர் திருப்பி விடப்படும். அந்த ரோடு மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளதால் இந்த தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான வழிவகைகளை அவர்கள் செய்வார்கள்.இதற்கான திட்டமும் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. குமலன் குட்டை கார்னரில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்டு குமலன் குட்டை பகுதியில் ஒரு ரவுண்டானா உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கவுன்சிலர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பவானி காளிங்கராயன் பாளையத்தில் அத்திக்கடவு அவிநாசி கூட்டு குடிநீர் திட்ட முடிவுற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×