என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மலைப் பகுதி"
- தீயணைப்பு துறையினர் விரைந்து செயல் பட்டு தீயை அணைத்தனர்.
- காய்ந்த சருகுகளுக்கு தீயணைப்பு துறையினரே தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாம்பழத்துறையாறு அணை உள்ளது.
இந்த அணை அமைந்து உள்ளது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். இந்த மலையடிவாரத்தில் சிலர் வசித்து வருகின்றனர். மலை யில் ஏராளமான மரங்கள் செடிகள் உள்ள நிலையில், வெப்ப காலங்களில் இங்கு திடீரென தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.
இதனை தடுக்க வனத் துறையினரும் தீயணைப்பு துறை யினரும் அடிக்கடி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மலைப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு தீ பரவி எரிய தொடங்கியது. தீயணைப்பு துறையினர் விரைந்து செயல் பட்டு தீயை அணைத்தனர். இதுபற்றி விசாரித்த போது, மலையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாது காப்பு கருதி, காய்ந்த சருகு களுக்கு தீயணைப்பு துறை யினரே தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
வெப்ப நேரங்களில் மலைப்பகுதியில் காய்ந்த சருகுகளில் தீ பிடித்தால், அது காட்டுத்தீயாக மாறி விடும். எனவே அந்த காலங்களில் மலையடிவாரத்தின் அருகே கிடக்கும் சருகுகளுக்கு தீ வைத்து அணைப்பது வழக்கமான ஓன்று தான். அது போல தான் தற்போதும் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.