search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதள பதிவு"

    தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் இம்மாதம் 15-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்

    திருப்பூர்:

    தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் இம்மாதம் 15-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் கட்டாயம் ஆதார் இணைத்திருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள், இ-சேவை மையம் மூலமாக சாதி, வருமான சான்றிதழ் விண்ணப்பித்து பெற வேண்டும்.

    ஜாதிசான்றிதழ், ஆதார், குடும்ப வருமானம் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஆவணங்களை முழுமையாக பெற்று தகுதியானவர் விபரங்களை தெரிவு செய்து வருகிற 15-ந் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

    • அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    • www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கல்லூரியில் வருகிற

    28-ந் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய 2 தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைகின்றன.

    இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலை வாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் 28-ந் தேதி காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை கலந்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவச சேவையாகும்.

    இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 1000-த்திற்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×