என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேளாண் உபகரணங்கள்"
- வட்டார வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
- கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் இருக்கூர், பிலிக்கல்பா ளையம், அ.குன்னத்தூர் ஆகிய கிராமத்திற்கு (பெரிய மருதூர், அய்யம்பாளையம், பஞ்சம் பாளையம் , செஞ்சு டையாம்பாளையம், வலசு பாளையம் தெற்கு , வடக்கு செல்லப்பம்பாளையம்) தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள்(பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி) மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, ரேசன் அட்டை, புகை படம் -1 ஆகியவற்றை கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை.
வேளாண்மை உபகரணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் அல்லது உழவர் பாதுகாப்பு அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என கபிலர்மலை வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை உதவி வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் (பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), ஜிப்சம், ஜிங் சல்பேட் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
- உழவர் நலத்துறை உதவி வேளாண்மை அலுவலர் ராதாமணி தெரிவித்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் கபிலர்மலை ஒன்றியம் வடகரையாத்தூர் கிராமத்திற்கு தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் (பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), ஜிப்சம், ஜிங் சல்பேட் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
எனவே விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, ரேசன் அட்டை நகலை கபிலர்மலை உதவி வேளாண்மை அலுவல கத்திற்கு கொண்டுவந்து பெற்றுக் கொள்ளலாம்.
வேளாண்மை உபகர ணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவ சாயிகளுக்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என கபிலர்மலை உழவர் நலத்துறை உதவி
வேளாண்மை அலுவலர் ராதாமணி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்