search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10ம் வகுப்பு தேர்வு"

    • குஜராத் போர்டு 10ம் வகுப்பு முடிவில் 99.72% மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார்.
    • டாக்டராவதே லட்சியம் என பூனம் தெரிவித்துள்ளார்.

    குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளரின் மகள் பூனம் குஷ்வாஹா, குஜராத் வாரிய 10ம் வகுப்புத் தேர்வில் 99.72% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

    குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளரின் மகள் பூனம் குஷ்வாஹா, நேற்று முன்தினம் குஜராத் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம் (GSEB) வெளியிட்ட குஜராத் போர்டு 10ம் வகுப்பு முடிவில் 99.72% மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார்.

    பூனத்தின் தந்தை பிரகாஷ் குஷ்வாஹா கடந்த 25 ஆண்டுகளாக வதோதராவில் பானிபூரி விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். பூனம் தன் தந்தைக்கு வியாபாரத்திலும், தாய்க்கு வீட்டு வேலைகளிலும் பல வருடங்களாக உதவி வந்திருக்கிறார். இருப்பினும், அவர் எந்த நிலையில், தன்னுடைய படிப்பை சமப்படுத்த தவறியதில்லை.

    பூனம் தன் தந்தையின் பானிபூரி வண்டியை பல ஊர்களிலும் கொண்டு சென்று வியாபாரம், கூடுதல் வேலைகள் மற்றும் நிதி சவால்களை எதிர்கொண்ட போதிலும், பூனமிற்கு படிப்பின் மீதான அர்ப்பணிப்பு ஒருபோதும் குறையவில்லை.

    மருத்துவப் பணியை தொடர வேண்டும் என்ற கனவுகளுடன், பூனம் டாக்டராவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

    பூனத்தின் இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், பலருக்கும் உத்வேகமாகவும், சவால்களை சமாளித்து கல்வியில் புதிய உயரங்களை எட்டுவதில், விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது.

    • மாவட்டத்தில் 9,565 பேர் தேர்வு எழுதினர்.
    • தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சிறிய மாவட்டங்கள் தான் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது.

    10-ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 9,565 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,308 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.31 சதவீதமாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17,707 பேரில 17,179பேர் வெற்றி பெற்று 2-வது இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,692 பேர் தேர்வு எழுதியதில் 15,121 பேர் வெற்றி பெற்றனர். இது 95.17 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்தையும் பெற்று உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சிறிய மாவட்டங்கள் தான் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது.

    மாவட்டம் வாரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-

    அரியலூர்97.31, சிவகங்கை 97.02, ராமநாதபுரம்96.36, கன்னியாகுமரி96.24, திருச்சி95.23, விருதுநகர்95.14, ஈரோடு95.08, பெரம்பலூர்94.77, தூத்துக்குடி94.39, விழுப்புரம்94.11, மதுரை94.07, கோவை94.01, கரூர்93.59, நாமக்கல்93.51, தஞ்சாவூர்93.40, திருநெல்வேலி93.04, தென்காசி92.69, தேனி92.63, கடலூர்92.63, திருவாரூர்92.49, திருப்பூர்92.38, திண்டுக்கல்92.32, புதுக்கோட்டை91.84, சேலம்91.75, கிருஷ்ணகிரி91.43, ஊட்டி90.61, மயிலாடுதுறை90.48, தர்மபுரி90.49, நாகப்பட்டினம்89.70, சென்னை88.21, திருப்பத்தூர் (வி)88.20, காஞ்சீபுரம்87.55, செங்கல்பட்டு87.38, கள்ளக்குறிச்சி86.83, திருவள்ளூர்86.52, திருவண்ணாமலை86.10, ராணிப்பேட்டை85.48, வேலூர்82.07, காரைக்கால்78.20, புதுச்சேரி91.28.

    • தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.
    • கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே சின்னகனவாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்-தீனா தம்பதியருக்கு முதலாவதாக பெண் குழந்தையும். அதனை தொடர்ந்து 2007 ம் ஆண்டு இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கிருஷ்ணன் தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தாலும் முதலில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் உள்பட 3 மகள்களையும் அங்குள்ள அரசு பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்து வந்தனர்.

    இந்நிலையில் இரட்டையர்களான ராமதேவி, லட்சுமி தேவி இவர்கள் இருவரும் தொப்பூர் அருகே உள்ள தொ.காணிகரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் இருவரும் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. ஒரே நாளில் பிறந்த இருவருக்கும் நேற்றைய தேர்வு முடிவுகளில் இதில் அதிசயதக்கும் விதமாக ஒரே நாள் பிறந்த இரட்டையர் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். பொதுமக்களும் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர் மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

    • அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை புதுவை, காரைக்காலை சேர்ந்த 7 ஆயிரத்து 797 மாணவர்களும், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 மாணவர்கள் எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 700 மாணவர்களும், 7 ஆயிரத்து 38 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும். கடந்த ஆண்டு அரசு, தனியார் பள்ளிகளில் 92.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    அரசு பள்ளிகளில் மட்டும் 85.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 3.8 சதவீதமும், அரசு பள்ளிகளில் மட்டும் 6.09 சதவீதமும் குறைந்துள்ளது. புதுவை, காரைக்காலில் மொத்தம் 287 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.

    இதில் புதுவையில் 84, காரைக்காலில் 7 என மொத்தம் 91 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவை, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 107. இதில் புதுவையில் 7 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் கணிதத்தில் 61, அறிவியலில் 49, சமூக அறிவியலில் 19 பேர் என மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ கேஎஸ்பி.ரமேஷ், கல்வித்துறை செயலர் ஜவகர், இயக்குனர் பிரியதர்ஷினி, துணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ருக்மணி தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.
    • இக்கட்டான நேரத்திலும் கல்வியின் முக்கியத்துவம் கருதி தேர்வு எழுதிய ருக்மினி ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக அதிகாரிகள் பாராட்டினர்.

    பாங்கா:

    பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ருக்மினி குமாரி (வயது22). இவர் 10-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த செவ்வாய்கிழமை கணிதத்தேர்வை எழுதியிருந்தார். மறுநாள் அறிவியல் தேர்வு எழுத வேண்டியது இருந்தது.

    இந்நிலையில் இரவில் வீட்டில் இருந்த அவருக்கு பிரசவ வலி ஆரம்பித்தது. எனினும் மறுநாள் தேர்வு எழுத வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதுகுறித்து தனது எண்ணத்தை அவர் குடும்பத்தினரிடமும் கூறியிருந்தார்.

    இந்நிலையில் மறுநாள் காலையில் 3 மணி நேரத்திற்கு முன்பாகவே அவர் தேர்வு அறைக்கு சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    வலிதாங்க முடியாத அவரை அதிகாரிகள் எச்சரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஆரோக்கியமான ஆண்குழந்தை பிறந்தது. உடனே ருக்மணி தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். சுகப்பிரசவமாக இருந்ததால் அவரது உடல்நிலையும் நன்றாக இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை மீண்டும் தேர்வு எழுத அனுமதித்தனர்.

    இக்கட்டான நேரத்திலும் கல்வியின் முக்கியத்துவம் கருதி தேர்வு எழுதிய ருக்மினி ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக அதிகாரிகள் பாராட்டினர்.

    ×