search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குழந்தை பெற்ற சிறிது நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 22 வயது பெண்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குழந்தை பெற்ற சிறிது நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 22 வயது பெண்

    • ருக்மணி தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.
    • இக்கட்டான நேரத்திலும் கல்வியின் முக்கியத்துவம் கருதி தேர்வு எழுதிய ருக்மினி ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக அதிகாரிகள் பாராட்டினர்.

    பாங்கா:

    பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ருக்மினி குமாரி (வயது22). இவர் 10-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த செவ்வாய்கிழமை கணிதத்தேர்வை எழுதியிருந்தார். மறுநாள் அறிவியல் தேர்வு எழுத வேண்டியது இருந்தது.

    இந்நிலையில் இரவில் வீட்டில் இருந்த அவருக்கு பிரசவ வலி ஆரம்பித்தது. எனினும் மறுநாள் தேர்வு எழுத வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதுகுறித்து தனது எண்ணத்தை அவர் குடும்பத்தினரிடமும் கூறியிருந்தார்.

    இந்நிலையில் மறுநாள் காலையில் 3 மணி நேரத்திற்கு முன்பாகவே அவர் தேர்வு அறைக்கு சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    வலிதாங்க முடியாத அவரை அதிகாரிகள் எச்சரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஆரோக்கியமான ஆண்குழந்தை பிறந்தது. உடனே ருக்மணி தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். சுகப்பிரசவமாக இருந்ததால் அவரது உடல்நிலையும் நன்றாக இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை மீண்டும் தேர்வு எழுத அனுமதித்தனர்.

    இக்கட்டான நேரத்திலும் கல்வியின் முக்கியத்துவம் கருதி தேர்வு எழுதிய ருக்மினி ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக அதிகாரிகள் பாராட்டினர்.

    Next Story
    ×