search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரவுகிறது"

    தடுக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை

    கன்னியாகுமாரி, பிப். 26 -

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் அதை சுற்றி கோதையாறு, தக்கமலை, குற்றியாறு, மோதிரமலை போன்ற மலை பகுதிகள் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் அதிக அளவில் உள்ளது. இதனால் வனப் பகுதிகளில் அடிக்கடி தீ பரவும் அபாயம் உள்ளது. காட்டு பகுதிகளில் விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. வெயில் காலங்களில் தீ அதிக அளவில் பரவி னால் விலை உயர்ந்த மரங்கள், வனவிலங்குகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

    மாவட்டத்தில் மொத்த முள்ள நிலப்பரப்பில் சுமார் 33 சதவிகிதம் காடுகள் உள்ள நிலையில், ஆண்டு தோறும் கோடைகாலத்தில் காடுகளில் ஆங்காங்கே தீ பிடிப்பதால் வன வளம் அழிவதோடு, வன விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப் படுகின்றன. மேலும் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களும், ரப்பர் கழக தொழிலாளர்களும் காட்டுத் தீயால் பாதிக்கப் படுகின்றனர்.

    காடுகளில் மனிதர்களா லும், வெப்பத்தின் காரண மாக மூங்கில் மற்றும் புதற்கள் எரிவதாலும் தீ ஏற்படுகிறது. காடுகளில் ஏற்படும் தீயை கண்காணிக்கும் வகையில் காடுகளில் தீ தடுப்பு காவலர்கள் போதிய அளவில் அரசால் நியமிக்கப்பட வில்லை எனவும், தீ தடுப்பு காடுகள் வெட்டப் டப்படவில்லை எனவும் பழங்குடி மக்கள் மற்றும் ரப்பர் கழக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மாவட்டத்தில் தற்போது காடுகளில் பல்வேறு இடங்களில் தீ ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோதையாறு அருகே குற்றியாறு ராக் ஏரியா வனப்பகுதி மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுப் பகுதிகளில் உடனே சென்று தீயை அணைக்கும் வகையிலான தொழில் நுட்பங்கள் இல்லாத நிலையில் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வரும் நிலையில், வனப்பகுதிகள் மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் பல இடங்களில் தீ பிடித்து வருகிறது. குறிப்பாக காட்டுக்குள் ஏற்பட்டுள்ள தீ ரப்பர் கழக பகுதிகளில் பரவி ரப்பர் மரங்கள் கருகி வருகின்றன.

    இதே போன்று காட்டுக்குள் ஏற்பட்டு வரும் தீ காரணமாக விலை உயர்ந்த மரங்கள் கருகி வருவதுடன், வன விலங்குகளும் அச்சுறுத் தலுக்குள்ளாகி உள்ளன. இதே போன்று பழங்குடி மக்களும் அச்சப்பட்ட நிலையில் உள்ளனர். எனவே வனத்துறையினர் காட்டுக்குள் தீ ஏற்படாத வகையில் போதிய தீ தடுப்பு காவலர்களை நியமித்து தீ ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். மேலும் தனியார் வனப்பகுதி எல்கைகளில் தீ தடுப்பு கோடுகள் (பயர் லைன்ஸ்) வெட்ட வேண்டும். மேலும் தீ ஏற்பட்டால் அதை தடுக்க போதிய கருவிகளையும் கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×