search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காயம் ஏற்றுமதி"

    • கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த அரிசி ஏற்றுமதி நடந்து உள்ளது.
    • பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    உலக அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த அரிசி ஏற்றுமதி நடந்து உள்ளது.

    அதேநேரம் பாசுமதி ஏற்றுமதிக்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நிர்ணயித்தது. அதன்படி ஒரு டன் பாசுமதி அரிசிக்கு 1200 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டது.

    இதற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் கவலை வெளியிட்டதால் அக்டோபர் மாதம் இது 950 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.80,000) என குறைக்கப்பட்டது.

    இந்த விலைக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே ஏற்றுமதி பதிவு மற்றும் அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு குறைவாக பாசுமதியை ஏற்றுமதி செய்ய முடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    வெங்காயம் ஏற்றுமதிக்கும் டன் ஒன்றுக்கு 550 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.46,000) என குறைந்தபட்ச ஏற்றுமதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த விலைக்கு குறைவாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

    பாசுமதி அரிசி மற்றும் வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்குமாறு விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு நேற்று நீக்கியது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும் என மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார்.

    இதைப்போல விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இதைப்போல வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முன்னணியில் இருக்கிறது.

    அரியானா மற்றும் மகாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி.
    • மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி.

    2023-24-ல் வெங்காயத்தின் உற்பத்தி அதற்கு முந்தைய காலக்கட்டத்தை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்ததாலும், வெளிநாட்டிலும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.

    இந்த நிலையில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    இந்த வெங்காயம் முற்றிலும் ஏற்றமதியைச் சார்ந்தது. வழக்கமான வெங்காயத்தை விட இந்த வெங்காயம் அறுவடை செய்வதற்கு அதிக செலவாகும்.

    • விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது.
    • மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    உள்நாட்டில் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது. இந்த தடை வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் நட்பு நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி நிபந்தனைகளின் அடிப்படையில் அரசின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

    • 50 ஆயிரம் டன் வெங்காயம் வங்காளதேசத்திற்கும், 1200 டன் வெங்காயம் மொரீசியஸ்க்கும், 3000 டன் பஹ்ரைனுக்கும் ஏற்றுமதி.
    • மார்ச் 31-ந்தேதிக்கு பிறகும் தடையை நீக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31-ந்தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீசியஸ், பஹ்ரைன், பூடான் ஆகிய நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    50 ஆயிரம் டன் வெங்காயம் வங்காளதேசத்திற்கும், 1200 டன் வெங்காயம் மொரீசியஸ்க்கும், 3000 டன் பஹ்ரைனுக்கும், 560 டன் பூடானுக்கும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளோம் என நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

    தனியார் வர்த்தகத்தால் மார்ச் 31-ந்தேதி வரை ஏற்றுமதி செய்யப்படும். வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து வந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டுகோள் விடுக்கின்றன. வெளியுறவுத்துறை அமைச்சகம் எவ்வளவு வழங்க வேண்டும் என மதிப்பிடுகிறது. அமைச்சர்கள் குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

    உள்நாட்டு வெங்காயம் வினியோகம் சீராக இருக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது.

    விரைவில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையிலும், மார்ச் 31-ந்தேதிக்கு பிறகும் தடையை நீக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ரபி (குளிர்காலம்) வெங்காய உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாகத்தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மகராஷ்டிராவில் குறைவான நிலப்பரப்பில்தான் பயிர் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு காரணமாக எனக் கூறப்படுகிறது.

    • வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • வெங்காய விதைகளை ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு தடையோ, கட்டுப்பாடுகளோ எதுவும் இல்லை என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    மேலும், வெங்காய விதைகளை ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் இருப்பதாக தெளிவுபடுத்தி உள்ளது.

    ×