என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோமாரி தடுப்பூசி முகாம்"
- கால்நடைகளுக்கு 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நாளை(புதன்கிழமை) முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளது.
- அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நாளை(புதன்கிழமை) முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 லட்சத்து 31 ஆயிரத்து 124 கால்நடை களுக்கும், 100 சதவீதம் முழுமையாக தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்த பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்க ளுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று மார்ச் 1ம் தேதி முதல், ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி தவறாது போட்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.