search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில் காரணமாக"

    • ஈரோட்டில் கடுமையான வெயில் நிலவி வருகிறது.
    • இதனால் பழங்கள் விலை கடந்த வாரங்களை விட அதிக அளவில் உயர்ந்து விட்டது.

    ஈரோடு:

    கோடைக்காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

    வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரி பிஞ்சுகள், பழங்கள் மற்றும் ஜூஸ்களை சாப்பிட்டு வருகின்றனர்.

    இதனால் பழங்கள் விலை கடந்த வாரங்களை விட அதிக அளவில் உயர்ந்து விட்டது.

    ஈரோடு பழமார்க்கெ ட்டில் இன்று இத்தாலி, துருக்கி ஆப்பிள் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரான் ஆப்பிள் கிலோ ரூ.120-க்கும், மாதுளை கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரைக்கும் விற்பனை யானது.

    மேலும் ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.120-க்கும், நாக்பூர் ஆரஞ்சு கிலோ ரூ.60 முதல் ரூ.80-க்கும், திராட்சை கிலோ ரூ.70-க்கும் விற்பனையானது.

    இதேபோல் சாத்துக்குடி கிலோ ரூ.70-க்கும், சப்போட்டா கிலோ ரூ.40-க்கும் பன்னீர் திராட்சை கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பழங்களின் விலை உயர்ந்தாலும் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் வழக்கம் போல் பழங்களை வாங்கி வருகின்றனர். 

    ×