search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றாலைகள் உற்பத்தி"

    • 10 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன.
    • நிதியாண்டு அடிப்படையில் தான் மொத்த மின்உ ற்பத்தி கணக்கிட ப்படுவது வழக்கம்.

    கோவை,

    கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகள் மூலம் 20 ஆயிரம் மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என காற்றாலை மின் உற்பத்தியா ளர்கள் தெரிவித்து ள்ளனர்.அதிகரித்துவரும் மின்தேவை யை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

    தமிழ்நாட்டில் சூரியஒளி ஆற்றல் உற்பத்தியில் 4,500 மெகாவாட் மற்றும் காற்றாலை துறையில் 10 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

    ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக மின் உற்பத்தி சிறப்பாக உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:

    காற்றாலை சீசன் குறிப்பிட்ட ஏழு மாதங்கள் மட்டுமே இருந்தாலும் நிதியாண்டு அடிப்படையில் தான் மொத்த மின்உ ற்பத்தி கணக்கிட ப்படுவது வழக்கம்.

    கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்தம் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன.2022-23ம் நிதியா ண்டிலும் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. தற்போது வரை 10 ஆயிரம் மில்லியன் யூனிட்டை கடந்துவிட்டது. மார்ச் இறுதிக்குள் கடந்த நிதியாண்டு போல 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மத்திய, மாநில அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×