search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்டர் கவாஸ்கர் கோப்பை"

    • பந்தின் பாதிப்பக்கம் வெல்ல நிறமும் மீதி பக்கம் சிவப்பு நிறமும் உள்ளது.
    • இந்த பந்தை கொண்டு பயிற்சி செய்தால் சிறப்பாக பந்துவீச முடியும் என்று சொல்லப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியை ஒட்டி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கலந்த பந்தை பயன்படுத்தி மிட்செல் ஸ்டார்க் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பந்தின் பாதிப்பக்கம் வெள்ளை நிறமும் மீதி பக்கம் சிவப்பு நிறமும் உள்ளது. இந்த பந்தை கொண்டு பயிற்சி செய்தால் சிறப்பாக பந்துவீச முடியும் என்று சொல்லப்படுகிறது.

    • ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட பார்டர்- கவாஸ்கர் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
    • இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந் சிட்னியில் தொடங்கும் டெஸ்ட் உடன் தொடர் முடிகிறது.

    இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு தொடர்களையும் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி விவரம்:

    பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஹேஸ்ல்வுட், ஜோஸ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லியோன், மிட்சல் மார்ஷ் , நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித் , மிட்சல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட்,

    இந்த தொடருக்கான இந்திய அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணைக்கேப்டன்), 3. ஜெய்ஸ்வல், 4. அபிமன்யூ ஈஸ்வரன், 5. சுப்மன் கில், 6. விராட் கோலி, 7. கே.எல். ராகுல், 8. ரிஷப் பண்ட் (வி.கீப்பர்), 9. சர்பராஸ் கான், 10. துருவ் ஜூரெல் (வி.கீப்பர்), 11. அஸ்வின், 12. ஜடேஜா, 13. முகமது சிராஜ், 14. ஆகாஷ் தீப், 15. பிரசித் கிருஷ்ணா, 16. ஹர்ஷித் ராணா, 17. நிதிஷ் குமார் ரெட்டி, 18. வாஷிங்டன் சுந்தர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது.
    • கவுதம் கம்பீர் மும்பையில் நாளை காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்.

    டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி தொடர்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.

    சொந்த மண்ணில் ஏற்பட்ட இந்த படுதோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    நியூசிலாந்திடம் முழுமையாக தோற்றதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணதில் இந்திய அணி 5 டெஸ்டில் 4-ல் வெல்ல வேண்டும். அப்படி நிகழாவிட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக முன்னேற இயலாது. இதனால் ஆஸ்திரேலிய தொடர் கம்பீரின் தலை விதியை நிர்ணயம் செய்யும் என்று சொல்லப்படுகிறது.

    நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் படுதோல்விக்கு பிறகு பிசிசிஐ தலைமையில் நீண்ட நேரம் ரிவ்யூ மீட்டிங் நடந்தது. இந்த மீட்டிங்கில் கம்பீர் மற்றும் ரோகித்தை தேர்வுக்குழு தலைவர்கள் கடுமையாக விமர்சித்ததாக சொல்லப்படுகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசாத இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் நாளை காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விரைவில் தொடங்க இருப்பதால் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும்.

    பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ஓய்வு முடிவை திரும்ப பெற தயாராக இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர் 26 சதங்கள், 37 அரைசதங்களை விளாசியுள்ளார். இதில் மொத்தம் 8786 ரன்களை அடித்துள்ளார்.

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தான் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பினால் ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய டேவிட் வார்னர், "நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும். உண்மையைச் சொல்வதானால், பிப்ரவரியில் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து என் நண்பர்கள் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளனர்."

    "எனவே உண்மையாகச் சொன்னால், இந்த தொடருக்கு நான் உண்மையிலேயே தேவைப்பட்டால், அடுத்த ஷீல்ட் போட்டியில் விளையாடி, தொடரில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். சரியான காரணங்களுக்காக நான் ஓய்வு பெற்றேன். அவர்களுக்கு யாரேனும் தேவைப்பட்டால் என் கையை உயர்த்துகிறேன். நான் அதிலிருந்து விலகி செல்லப் போவதில்லை," என்று கூறினார்.

    • இந்த அணியில் 2 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் -கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக அங்கு விளையாடிய 2 தொடர்களையும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற தயாராகி வருகிறது.

    அதற்கு முன்பாக இந்தியா ஏ அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது. அதுபோக பெர்த் நகரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்தியா ஏ அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    சமீபத்திய வங்கதேச தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி மற்றும் படிக்கல் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பவுலிங் துறையில் கலில் அகமது, முகேஷ் குமார், யாஸ் தயாள், நவ்திப் சைனி, ஆல் ரவுண்டராக அசத்தி வரும் தானுஷ் கோட்டியான் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

    ஆஸ்திரேலியா ஏ தொடருக்கான இந்தியா ஏ அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், (கீப்பர்), அபிஷேக் போரல் (கீப்பர்), முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், டானுஷ் கோட்டியான்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தது
    • நிதானமாக விளையாடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 186 ரன்கள் சேர்த்தார்.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிதானமாக ஆடிய விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 128 ரன்னும், அக்ஷர் படேல் 79 ரன்னும், கே.எஸ்.பரத் 44 ரன்னும் எடுத்தனர்.

    91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடியை டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் விளாசினார். லபுசங்கே 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று பிற்பகல் வரை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை அத்துடன் முடித்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.

    ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், 2-1 என தொடரை வென்றது. இதன்மூலம் இந்தியா தொடர்ந்து நான்கு முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×