search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமரச"

    • நீதிமன்றங்களில்‌ நிலுவையில்‌ இருக்கும்‌ வழக்குகள்‌ சமரச மையம்‌ மூலம்‌ தீர்த்துக்‌ கொள்ள முடியும்‌.
    • சமரச முறையிலும்‌ தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.

    இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.

    சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.

    இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    ×