search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமிய சந்தை"

    • கிராமிய சந்தை தொடக்கப்பட்டது.
    • பிரமுகர்கள் கண்ணன், செல்லம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் நபார்டு கிராமிய சந்தை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம்தென்னரசு கிராமிய சந்தையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நபார்டு வங்கி உதவியுடன் சீட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.

    சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மற்றும் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வட்டாரத்தில் உள்ள விவசாய பங்கு தாரர்களை கொண்டு இது செயல்பட்டு வருகிறது.

    பின்னர் நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு வாழ்வாதார கடனுதவி திட்டத்தின் கீழ் 5 கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.16.59 லட்சம் மதிப்பிலான கடனு தவிகளையும், 2 பயனாளிகளுக்கு இலவச தார்ப்பாய்களைஅமைச்சர் வழங்கினார்.

    சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விவசாய கடன் அட்டை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2.44லட்சம் மதிப்பிலான கடனு தவிகளையும், 2 பயனாளிகளுக்கு நபார்டு கிராமிய சந்தை உறுப்பினர் அட்டை களையும், விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க பதிவு சான்றிதழையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜ சுரேஷ்வரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், பேரூராட்சி தலைவர்கள் துளசிதாஸ் (மல்லாங்கிணறு), செந்தில் (காரியாபட்டி), காரியாபட்டி யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன், சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பாண்டியன், முதன்மை செயல் அலுவலர் சிவகுமார், பிரமுகர்கள் கண்ணன், செல்லம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×