என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்"
- அரசியல் கட்சி ஊா்வலமாக இல்லாமல் கட்டுப்பாடு உள்ள அணிவகுப்பாக அந்த ஊா்வலம் நடைபெறும்.
- தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-
கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமியன்று ஆா்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் நிறுவன நாளும், இந்நாட்டின் வெற்றி திருநாளுமாக கொண்டாடப்படும் விதமாக விஜயதசமி நாளில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலம் கடந்த 98 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சி ஊா்வலமாக இல்லாமல் கட்டுப்பாடு உள்ள அணிவகுப்பாக அந்த ஊா்வலம் நடைபெறும். தனிநபரை குறிப்பிட்ட வாழ்க, ஒழிக கோஷங்கள் எதுவும் எழுப்பப்படாது. சீருடை அணிந்த தன்னாா்வலா்களால் மக்களிடையே கட்டுப்பாடு, தேசபக்தி, ஒற்றுமை, ஒழுங்கு போன்ற நற்சிந்தனையை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெறும்.
கேரளம், புதுச்சேரி உள்பட எல்லா மாநிலங்களிலும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியும் அமைதியாக உற்சாகமாக நடைபெற்றது. எந்த மாநிலத்திலும் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை தமிழகத்தில் இருக்கிறது என தமிழக அரசு கருதுவது திமுக., அரசின் ஆளுமை தன்மையில் உள்ள குறைபாடாகத்தான் தெரிகிறது.
அதே சமயம் தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்தில் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊா்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தும் தமிழகஅரசு செயப்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். இது ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரானதாகும்.
ஆகவே, தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு காலதாமதமின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 600 போலீசார் பாதுகாப்பு
- ஊர்வலம் அமைதியாக நடத்திட ஆலோசனை
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள முருகன் சினிமா தியேட்டர் அருகில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் செல்லும் பாதையை திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் உட்பட போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 7 டிஎஸ்பிகள் 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 600 போலீசார் பாதுகாப்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். ஊர்வலம் அமைதியாக நடத்திட ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
மேலும் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் ஊர்வல பாதை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் ஆம்பூர் நகரம் முழுவதும் பரபரப்பாக உள்ளது.
- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
- 1,000 போலீசார் பாதுகாப்பு
ஆரணி:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக அணிவகுப்பு பேரணி நடத்திட தமிழகம் முழுவதும் நீதிமன்றம் மூலம் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு மூலம் அனுமதி பெறப்பட்டு (இன்று) தமிழகம் முழுவதும் உரிய பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணி வகுப்பு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி அளவில் ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதா னத்தில் இருந்து சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 300 பேர் பேண்ட் வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழி யாக கொசப்பாளையம் சுந்தரம் தெரு, நேஷனல் டாக்கீஸ் சாலை, தச்சூர் சாலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள என்.மகாலில் நிறைவு செய்து அங்கு ஆலோசனை கூட்டம் நடை பெறுகிறது.
இந்த நிலையில் பேரணி செல்லும் பாதைகளை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் நேற்று போலீசாருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது காந்தி ரோட்டில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் தடுப்பு வேலிகள் எங்கு அமைக்கப்பட வேண்டும், கயிறுகள் எங்கு போலீசார் அமைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆரணி துணை போலீஸ் சூப் பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரேசன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார். சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- நாளை நடக்கிறது
- பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
முருகன் தியேட்டர் அருகில் இருந்து மாலை 4.15 மணிக்கு ஊர்வலம் தொடங்குகிறது. இதையடுத்து மாலை 6 மணி அளவில் பொ துக்கூட்டம் நடைபெறுகிறது.
அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்க வாணியம்பாடி, ஆம்பூர் அருகே உள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.
இதைத் தொடர்ந்து ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்