search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறக்கப்பட்டதால்"

    • கோனேரிபட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
    • காவிரி ஆறு தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

    அம்மாபேட்டை:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், நெரிஞ்சி ப்பேட்டை, கோனே ரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை ஆகிய நீர்மின் தேக்க நிலைய கதவணை பகுதிகளை கடந்து திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது.

    இதில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகள் வருடத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு நீர்மின் தேக்க கதவணைகளிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 எந்தி ரங்கள் மூலம் 30 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    காவிரி யில் வரும் தண்ணீரின் வரத்துக்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலை யில் ஆண்டு தோறும் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதுமாக வெளி யேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாகும்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணையில் மதகுகள் திறந்து விடப்பட்டு தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

    இதனையடுத்து பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து தற்போது கோனேரிபட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் இன்னும் 15 நாட்களுக்கு நடைபெறுவதால் கடல்போல் தேங்கி இருந்த காவிரியாறு தண்ணீரின்றி பாறை திட்டு களாக காட்சி அளிக்கிறது.

    இதனால் கதவணை நீர்த்தேக்கத்தில் தயாரிக்க ப்படும் மின் உற்பத்தி தற்செயலாக நிறுத்த ப்பட்டுள்ளது.

    மேலும் கோனேரி பட்டி நீர் மின் தேக்க பகுதிகளான கோனேரிபட்டி படித்துறை, ஆனந்தம்பாளையம், சிங்கம்பேட்டை, அம்மா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடல்போல் தேங்கி இருந்த காவிரி ஆறு தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

    இதனால் அதிகளவில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

    ×