search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய ஆக்கி போட்டி"

    • ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது.
    • இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

    இந்தியா 3 முறை பட்டம்

    ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆக்கி போட்டியில் ஆசியாவில் இருந்து 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் வெற்றி பெறுவதற்கு வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வர வேண்டும் என்பதற்காக சமீபத்தில் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நெல்லை வந்தது

    தொடர்ந்து நேற்று கன்னியாகுமரிக்கு வந்தடைந்த இந்த கோப்பை யானது இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. முன்னதாக, கன்னியா குமரியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த டிராபியை அர்ஜுனா விருது பெற்ற வீரர் மணத்தி கணேசன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களிடம் அதனை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சரவணன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் கிருஷ்ண சக்கர வர்த்தி வரவேற்றார். ஆசிய ஆக்கி கோப்பை பற்றிய வரலாறை முன்னாள் விளையாட்டு அலுவலர் ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் எடுத்துரைத்தார்.

    அதனைத் தொடர்ந்து டிராபியை அம்பைக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கும், வீரர்களுக்கும் கலெக்டர் கார்த்திகேயன் மரக்கன்று கள் வழங்கினார். மேலும் வீரர்களுக்கு ஆக்கி மட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆக்கி தொடர்பான காட்சி போட்டி நடைபெற்றது.

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஆக்கி போட்டி அரங்கேறுகிறது.
    • இந்த போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்டு 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆக்கி போட்டி நடக்கிறது.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஆக்கி போட்டி அரங்கேறுகிறது. இந்த போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.

    சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இதில் இந்தியாவுடனான உறவு சீராக இல்லாததால் பாகிஸ்தான், சீனா அணிகள் இந்த போட்டியில் பங்கேற்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது. ஆனால் பாகிஸ்தான், சீனா அணிகள் ஆசிய ஆக்கி போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்து இருப்பதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று தெரிவித்தது.

    ×