என் மலர்
நீங்கள் தேடியது "கொண்டாடட்டம்"
- ராஜபாளையத்தில் ராம்கோ நிறுவனர் ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் பி. எஸ். கே. நகர் பகுதியில் உள்ள நினைவாலயத்தில் கீர்த்தனாஞ்சலியும், புஷ்பாஞ்சலியும் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 129-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பி. எஸ். கே. நகர் பகுதியில் உள்ள நினைவாலயத்தில் கீர்த்தனாஞ்சலியும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜாவும், குடும்பத்தினரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். சொக்கர் கோவிலில் ராமசாமி ராஜா படத்திற்கும், நினைவு ஜோதிக்கும் பூஜைகள் நடந்தன. ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் தொழிலாளரிடம் வழங்கி தொடங்கி வைத்தார். ராம மந்திரம் இல்லம் முன்பு அமைந்துள்ள சிலைக்கு பூஜைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ராம்கோ சிமெண்டு தொழிற்சாலை வளாகத்தில் ராம்கோ சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்த தானம், அன்னதானம், மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர் ஜோதி ஓட்டத்தின்போது ராம்கோ மில் தொழிலாளர்கள் ஜோதியை விருதுநகர் துலுக்கப்பட்டியில் அமைந்துள்ள ராம்கோ சிமெண்டு ஆலைக்கு கொண்டு சென்றனர். விழாவில் ராம்கோ குடும்பத்தினர்கள், மற்றும் நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






