search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு சுவர்கள்"

    • தடுப்பு சுவர் கட்டும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
    • ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அங்கு நடக்கும் கட்டுமான பணிகளை பார்வை யிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, மின்சாரம், கழிப்ப றை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. அங்கு நடக்கும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு-தென்மேற்கு பருவ மழை காலங்களில் அதிக மழை பெய்வதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சாலைகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு, இத்தலார் ஆகிய ஊராட்சியில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது. அப்போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வை யிட்டு, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கினர். அப்போது அந்த பகு தியில் வசிக்கும் பொதுமக்கள், கனமழை யால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்கவும் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விவரங்களை சேகரித்து, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்அடிப்படையில் அரசிடம் உரிய அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நஞ்சநாடு அம்மனட்டி கிராமத்தில் ரூ.1.39 கோடி மதிப்பில் 3 பணிகளும், இத்தலார் ஊராட்சியில் ரூ.1.21 கோடி மதிப்பில் 5 பணிகளும் என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பில் 8 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மழை காலம் தொடங்குவதற்கு முன்ன தாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் அறிவுறு த்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாம கேஸ்வரி, செய ற்பொறியா ளர் செல்வகு மரன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஸ்ரீதரன், நந்தக்குமார், நஞ்சநாடு ஊராட்சித்தலைவர் சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×