search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதன முறை"

    • நலிவடைந்த அரசு சிமெண்டு ஆலையை உலர் பதன முறைக்கு மாற்றி நவீனப்படுத்த வேண்டும்.
    • பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த விருதுநகர் மாவட்டத்தில் 1970-ம் ஆண்டு முதல்வர் கருணா நிதி ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பில் ஆலங்குளத்தில் சிமெண்டு ஆலை தொடங்கப்பட்டது.

    ராஜபாளையம்-சிவகாசி நடுவே தொடங்கப்பட்ட இந்த ஆலையை சுற்றிலும் சுமார் 150 ஆண்டுகளுக்கு உரிய சுண்ணாம்புக்கல் கனிம வளங்கள் மிகுந்து காணப் பட்டன. விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த இந்த பகுதியில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி அந்த பகுதியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசின் சிமெண்டு ஆலை நிறுவப்பட்டது.

    பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு இந்த ஆலை நடைபெற்று வந்தது. சிவகாசியில் இருந்து ஆலங்குளம் வரை ெரயில்வே பாதை அமைக்கப்பட்டதால் ெரயில் மூலமாக பல்வேறு நகரங்க ளுக்கும் இலகுவாக சிமெண்டு மூடைகளை அனுப்ப ஏதுவாக இருந்தது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு சூப்பர் ஸ்டார் சிமெண்டு என்று அறிமுகப்படுத்தி ரூ.240 கோடியில் நவீனப் படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்கு அந்தச் சமயத்தில் அந்த நிதி மாற்றப்பட்டு சிமெண்டு ஆலை நவீனப் படுத்தப்பட்டது.

    ஆலங்குளம் சிமெண்டு ஆலை தற்போது வரை ஈர பதன முறையிலேயே தயாரிக்கப்பட்டு வருவதால் செலவு அதிகமாகவும், அதிகளவில் தொழிலா ளர்கள் தேவைப்படுகின்றனர். தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது .

    இதை கருத்தில் கொண்டு நவீன முறைப்படி உலர் பதன முறைக்கு மாற்றினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் செலவினங்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறையும். தண்ணீர், மின்சாரம் மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும்.

    இன்னும் 137 லட்சம் மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கல் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள சுண்ணாம்பு கல்லே இன்னும் 65 ஆண்டு களுக்கு மேல் ஆலையை முறையாக இயக்குவதற்கு போதுமானதாக உள்ளது.

    தற்போது சிமெண்டு ஆலையில் ரூ.340 விலையில் ''வலிமை சிமெண்டு'' தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதர சிமெண்டு விலையை விட தரமானதாகவும், வலிமையானதாகவும் உள்ளதாக கட்டிட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இதை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    ஆலங்குளம் சிமெண்டு ஆலையில் இன்னும் 2,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுண்ணாம்புக்கல் எடுக்கா மல் உள்ளது.

    தினமும் 1,200 டன் சிமெண்டு உற்பத்தி செய்வதற்கு உலர்பதன முறைப்படி ரூ.240 கோடி செலவு செய்தால் ஆலையை நவீனப்படுத்தியும், 250 பட்டதாரி களுக்கு வேலை கொடுத்தும், பல தொழிலா ளர்களை உருவாக்கியும், இதன் மூலம் பலருக்கு வருமானமும் ஈட்டுவதற்கு ஏதுவாக இருக்கும். கருணா நிதி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான ஆட்சியில் ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி இந்த பகுதியை வளம் பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×