என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காய்கறி விலை உயர்வு"
- மளிகை பொருட்கள், கொண்டுவரப்பட்டு, மொத்த, சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
- அனைத்து காய்கறிகளும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்துள்ளது.
சென்னை:
கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், கொண்டுவரப்பட்டு, மொத்த, சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே பருவமழை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 200, பட்டாணி ரூ. 240, இஞ்சி ரூ. 170, பூண்டு ரூ. 330, அவரைக்காய் ரூ. 100, சின்ன வெங்காயம் ரூ. 100, வண்ண குடை மிளகாய் ரூ. 190-க்கு விற்பனை செய்யப்பட்டன.
இதேபோல, ஒரு கிலோ தக்காளி, பச்சைமிளகாய், பீா்க்கங்காய் ஆகியவை தலா ரூ. 75, ஊட்டி கேரட் மற்றும் பீட்ரூட், காராமணி, சேனைக்கிழங்கு ஆகியவை தலா ரூ.70, முள்ளங்கி ரூ. 50, வெண்டைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.60, புடலங்காய் ரூ. 45, எலுமிச்சை ரூ. 90, கட்டு புதினா, கொத்தமல்லி தலா ரூ. 35-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
- சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.
- ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 450 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்தது.
வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் பீன்ஸ் ரூ.250 வரை விற்கப்படுகிறது. இதனால் சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.
அதேபோல் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிப்பால் கத்தரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், சவ்சவ் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-
உஜாலா கத்தரிக்காய்-ரூ.50, வரி கத்தரிக்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.35, பீன்ஸ்-ரூ.200, அவரைக்காய்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.45, பீட்ரூட்-ரூ.25, முள்ளங்கி-ரூ.30, நூக்கல்-ரூ.30, சவ்சவ்-ரூ.50, சுரக்காய்-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.20, பாகற்காய்-ரூ.40, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.50, மாங்காய்-ரூ.25, பீர்க்கங்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.50, தக்காளி-ரூ.22, நாசிக் வெங்காயம்-ரூ.26, சின்ன வெங்காயம்-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.26, பச்சை மிளகாய்-ரூ.60, இஞ்சி-ரூ.135.
- வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளது.
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து சீரான பின்னர் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மழை பாதிப்பு காரணமாக ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி வரத்து வெகுவாக குறைந்து போனது.
இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளது. பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் கிலோ ரூ.80 வரை விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு-ரூ.50, கத்தரிக்காய்-ரூ.60, கேரட்-ரூ.60, பீட்ரூட்-ரூ.50, முட்டைகோஸ்-ரூ.25, பாகற்காய்-ரூ.70, முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கும், சின்னவெங்காயம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து சீரான பின்னர் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- காய்கறிகள் மட்டுமல்லாமல் அனைத்து உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன.
- ஓட்டல்களுக்கு காலை மற்றும் மாலை பீக் அவர்ஸ் என கணக்கிட்டு மின்சார கட்டணம் இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் இருந்து ஓட்டல்களும் தப்பவில்லை. ஓட்டல்களுக்கு தேவையான காய்கறிகள், உணவு பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து விட்டதால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 15 நாட்களாக உப்பு தவிர அனைத்து உணவு தானியங்கள், எண்ணெய், பருப்பு வகைகள் விலை கூடியுள்ளதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் ஓட்டல் உணவு பண்டங்களில் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இந்த மாதம் வரை பொருட்களின் விலை உயர்வு குறித்து ஆய்வு செய்த பிறகு இதனால் எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டு முடிவு செய்யப்படும் என்று சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
காய்கறிகள் மட்டுமல்லாமல் அனைத்து உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன. ஒரு மாதம் தாக்குபிடிக்க முடியுமா என்பதே சந்தேகம். தொடர்ந்து எல்லா வகையிலும் ஓட்டல் தொழில் பாதித்து வருகிறது.
ஓட்டல்களுக்கு காலை மற்றும் மாலை பீக் அவர்ஸ் என கணக்கிட்டு மின்சார கட்டணம் இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும். லாரி வாடகை, டீசல் விலை உயர்வே விலை ஏற்றத்துக்கு காரணம்.
எனவே அரசு ஓட்டல்களுக்கான பீக் அவர்ஸ் மின் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் தொழில் செய்ய முடியும். எனவே இந்த மாதம் இறுதி வரை காய்கறிகள், மளிகை பொருட்கள் விலை எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்துதான் அடுத்த மாதம் ஓட்டல் உணவு பண்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்வோம்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், பூரி மற்றும் சாப்பாடு ஆகியவற்றின் விலையை மேலும் அதிகப்படுத்தினால் வியாபாரம் பாதிக்கும் என்று கருதுகிறோம். ஆனால் தொடர் விலை உயர்வால் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 25 டன் பீன்ஸ் மட்டுமே விற்பனைக்கு வந்தது.
- கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.50-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஊட்டி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினசரி 70 டன் அளவுக்கு பீன்ஸ் விற்பனைக்கு வருவது வழக்கம்.
ஆனால் தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்ததால் பீன்ஸ் விலை திடீரென அதிகரித்தது. அதன் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது .
இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 25 டன் பீன்ஸ் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரையும் விற்கப்படுகிறது.
இதேபோல் வரத்து குறைவால் அவரைக்காய் கத்தரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உச்சம் அடைந்து உள்ளன.
கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.50-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது. ஆனால் திண்டுக்கல், தேனி, ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய பகுதிகளில் பெய்த கோடை மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பெரும்பாலான முருங்கை மரங்கள் சேதமடைந்தன.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் முருங்கைக்காய் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.90-க்கு எகிறி உள்ளது. சில்லரை விற்பனை கடையில் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முருங்கைக்காய் ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.
வரத்து குறைவால் அவரைக்காய் விலையும் அதிகரித்து உள்ளது இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ அவரைக்காய் ரூ.80-க்கும், சில்லரை விற்பனை கடையில் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோல் நாட்டு தக்காளி ரூ.30-க்கும், இஞ்சி-ரூ.200, உஜாலா கத்தரிக்காய்-ரூ.80, வரி கத்தரிக்காய்-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.60, ஊட்டி கேரட்-ரூ.70 க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்