search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளத்தன மாக"

    • மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை கண்காணிக்க, எஸ்.ஐ., இளையசூரியன் தலைமை யிலான போலீசார், பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கள்ளத்தன மாக டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி, இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. ராஜூ (மதுவிலக்கு) ஆகி யோர் உத்தரவின் பேரில், மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை கண்காணிக்க, எஸ்.ஐ., இளையசூரியன் தலைமை யிலான போலீசார், பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், மோகனூர் காவிரி ஆற்றின் கரை யில் உள்ள, செங்கத்துறை ரெயில்வே பாலம் அருகில், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், அவர் மோகனூர் உப்பிலியர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் லோகநாதன் (வயது 37) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி, இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    தொடர்ந்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது, 2 குவாட்டர் பாட்டில்களில், விஷநெடியுடன் கூடிய வாசம் வீசியதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து, லோக நாதனிடம் விசாரணை நடத்தியதில், போதை அதிகரிக்க ஊமத்தை சாறை மதுபானத்தில் கலந்ததாக அவர் கூறினார். போலீசார் லோகநாதனை கைது செய்து மேலும் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை நீதிமன்ற பரிசோதனைக்கும், ரசாயன பகுப்பாய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    கள்ளத்தனமாக விற்கும் மதுபானங்களில், போதை அதிகரிக்க, இது போன்ற விஷத்தன்மை கொண்ட ஊமத்தை செடியின் சாறைக் கலந்து விற்பதால், அந்த மதுபானத்தை குடிப்ப வர்களின் உடல்நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.

    மேலும், தனி நபருக்கு அதிக அளவில் மது பாட் டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர் குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×