search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசின் திட்டங்களை விளக்கும்"

    • விவசாயிகள் கலை நிகழ்ச்சி கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்றது.
    • உழவன் செயலி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

    ஈரோடு:

    வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

    இத்திட்டம் செயல்படும் நஞ்சைகொளாநல்லி கிராமத்தில் விவசாயிகள் கலை நிகழ்ச்சி கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது.

    வேளாண்மைதுறையின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அதன் நோக்கம் பற்றியும் தரிசு நிலத்தொகுப்பு குழு அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்க ப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டதின் மூலம் வழங்கப் படும் இடு பொருட்கள், இடு பொருட்களை விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பதிவு செய்ய உழவன் செயலி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

    கலை நிகழ்ச்சியில் ஊராட்சி பேபி செந்தில் குமார், வேளாண்மை அலு வலர் ரேகா, உதவி வேளா ண்மை அலுவலர் மாதவன், உதவி தோட்ட க்கலை அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    ×