search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்சில் கூட்டம்"

    • பஸ்சில் கூட்டம் அதிகமானதால் மாணவிகள் இருவரையும் கீழே இறங்குமாறு கண்டக்டர் கூறி உள்ளார்.
    • மாணவிகளை நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருப்போரூர்:

    கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மாணவ-மாணவிகள் சீருடையில் வந்தால் அவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிகள் 2 பேரை கண்டக்டர் கீழே இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

    திருப்போரூர் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படிக்கும் தனது சகோதரியுடன் திருப்போரூர் கோவில் குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தாம்பரம் செல்லும் (எண்515) பஸ்சில் பள்ளிக்குச் செல்ல ஏறினர்.

    அடுத்த பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் கூட்டம் அதிகமானதால் மாணவிகள் இருவரையும் கீழே இறங்குமாறு கண்டக்டர் கூறி உள்ளார். இதனால் செய்வது அறியாமல் மாணவிகள் இருவரும் கீழே இறங்கியதும் அவர்களை மீண்டும் பஸ்சில் ஏற்றாமல் அடுத்த பஸ்சில் வருமாறு கூறினார். பின்னர் பஸ் அங்கிருந்து சென்று விட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுபற்றி அவ்வழியே சென்ற ஒருவரின் செல்போன் மூலம் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வேறு பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமனோர் திருப்போரூரில் உள்ள நேரக்காப்பாளர் அறைக்கு சென்று டிரைவர், கண்டக்டர் நடந்தவிதம் குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளை நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×