search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளி மாநில"

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்க அருகே ஈரோடு (கனி மார்க்கெட்) ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது
    • சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை

    ஈரோடு

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்க அருகே ஈரோடு (கனி மார்க்கெட்) ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெறு கிறது. குறிப்பாக ஜவுளி வாரச்சந்தை திங்கட்கிழமை மாலை தொடங்கி விடிய, விடிய நடைபெற்று செவ்வாய்க்கிழமை மாலை முடிவ டைகிறது.

    இந்த ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வருவார்கள். மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    மேலும் ஆன்லைன் மூலமாக வும் ஆர்டர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வருகிறது. மற்ற இடங்களை காட்டிலும் ஜவுளி சந்தையில் துணிகளின் விலை குறைவாக விற்கப்படுவதால் இங்கே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை தீவிரம் அடைந்துள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வரவில்லை. இதனால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது ஆனி மாதம் பிறந்துள்ளதால் எந்த ஒரு விசேஷமும் இல்லை.

    இதனால் ஜவுளி வியா பாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய வார சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் இன்று அந்த மாநில வியாபாரிகள் வரவில்லை.

    ஆனால் இன்று மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதைப்போல் உள்ளூர் மாவட்ட வியாபாரிகளும் குறைந்த அளவை வந்திரு ந்தனர். சில்லரை வியாபாரம் 15 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரி வித்தனர். இதனால் இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. 

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அதன் அடிப்படையில் போலீசார், அந்த பகுதியில் சோதனை செய்ததில், அங்கு ஒருவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் - கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் எதிரே உள்ள சந்து பகுதியில், ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார், அந்த பகுதியில் சோதனை செய்ததில், அங்கு ஒருவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், அனிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது 48) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 100 வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சறையில் அடைத்தனர்.

    ×