search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி வீதியுலா"

    • கும்பாபிஷேகம் முன்னாள் எம்.பி பி.ஆர்.எஸ். வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ பி.கே.என். கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
    • சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் சாமி வீதியுலா நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே பூண்டியாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத புனிதவேல் திருமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை 25-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முன்னாள் எம்.பி பி.ஆர்.எஸ். வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ பி.கே.என். கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை கணபதி ஹோமத்துடன், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் மற்றும் பூர்ணாஹிதி நடைபெறுகிறது. பின்னர் சிகர விழாவான கும்பாபிஷேக விழா 25-ந்தேதி காலை கோ பூஜை , 2-ம் கால யாகசாலை பூஜை மற்றும் ஹோமங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடாகி காலை 10.10 மணிக்கு புனித வேல் திருமுருகன் ராஜகோபுரம், கொடிமரம் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடை பெறுகிறது. பின்னர் மாலை சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் சாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் அன்பழகன், அறங்காவலர் பரமாநந்தம், திருப்பணிக்குழு தலைவர் துரைராஜ், செயலாளர் குணசேகர், ஆடிட்டர் செந்தில்குமார், திருப்பணிக்குழு துணைத் தலைவர்கள் சம்பத்குமார், சாம்பசிவம் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், கிராம வாசிகள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    ×