search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருபூர்ணிமா"

    • குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • 205 சாய்பாபா பக்தர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்றைய நாளில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் பணம் உள்ளிட்டவற்றை அளித்தனர்.

    குரு பூர்ணிமா நாளில் ரூ.6.25 கோடி உண்டியல் வசூலானது. மேலும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

    இது தவிர கடந்த 3 நாட்களில் 205 சாய்பாபா பக்தர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.

    • திருப்பதியில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது.
    • பவுர்ணமியையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது.

    உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பவுர்ணமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 82,999 பேர் சாமி தரிசனம் செய்தனர். 38,875 பக்தர்கள் முடீ காணிக்கை செலுத்தினர்.

    ரூ.4.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×