search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமீபா"

    • அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,

    அரசியல்வாதிகள் படுகொலை, பாலியல் பலாத்காரம், கள்ளச்சாராய மரணங்கள், பட்டாசு ஆலையில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என பல அச்சுறுத்தல்களுக்கு இடையே, கேரளாவில் அமீபா தொற்றுநோய் பரவி வருவதும், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

    அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என்னும் தொற்றுநோய் காரணமாக நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிக்கப்பட்டால் 97 விழுக்காடு உயிரிழப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

    தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்றவை அமீபாவின் ஆரம்ப அறிகுறிகள் என்றும், பராமரிக்கப்படாத நீர்நிலைகள், ஏரி, ஆறு, நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் கோடைக் காலத்தில் நீண்ட நாட்கள் அதிக வெப்ப நிலையில் இருக்கும்போது, அதில் குளிப்பவர்களுக்கு அமீபா என்னும் உயிரி மூலம் தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தத் தொற்று நோய், சுகாதாரமற்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக உடலுக்குச் சென்று பாதிப்பினை ஏற்படுத்துவதால், தமிழ்நாட்டில் உள்ள நீச்சல் குளங்களை சுத்தம் செய்யவும், நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும்போது மூக்கு கிளிப் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தவும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிரக் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இதேபோன்று, அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெங்குக் காய்ச்சல் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    • சென்னை மாநகராட்சி பகுதிகளில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • மழைக்காலங்களில் கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி சார்பில், உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.

    இந்த பயிற்சி முகாமில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், ஆண் அல்லது பெண் நாய்கள் என அனைத்து விவரங்களையும் சேகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் துணை கமிஷனர் ஜெய சந்திரபானு ரெட்டி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவன இயக்குனர் கேர்லெட் அன்னே பெர்ணாண்டஸ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 ஆயிரத்து 100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில் 7 ஆயிரத்து 265 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

    சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம் அதிகரித்ததால் கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் புகார்கள் குறைந்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கு அடுத்த 3 மாதத்துக்குள் உரிமம் பெற வேண்டும். ரேபிஸ் தவிர மற்ற தடுப்பூசிகளும் நாய்களுக்கு போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ப்பட்டு வருகிறது.

    மூளையை தாக்கும் அமீபா நுண்ணுயிர் குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம். தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.

    மழைக்காலங்களில் கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவவேண்டும். பாதுகாப்பற்ற உணவை உண்ணக்கூடாது. இவைகள் கொரோனா காலத்தின் வழிமுறைகள் அல்ல. தொற்று நோய் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.
    • நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.

    கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொறுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நீர்நிலைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய என உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது

    இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.

    அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையை தின்னும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.
    • 3-வது உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உட லுக்குள் சென்று மூளையை தாக்கும் இந்த அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.

    கேரளாவில் கண்ணூரில் 13 வயது சிறுமியும், மலப்புரத்தில் 5 வயது சிறுமியும் ஏற்கனவே இந்த நோய்க்கு இறந்து விட்ட நிலையில், தற்போது கோழிக்கோட்டில் மேலும் ஒரு மாணவன் பரிதாபமாக இறந்துள்ளான்.

    கோழிக்கோடு மாவட்டம் ராமநாட்டு நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் பிரசாத்-ஜோதி தம்பதியரின் மகனான மிருதுல் (வயது 12), 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது பள்ளியின் அருகே உள்ள குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தது முதல் அமீபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வாந்தி மற்றும் தலைவ லியால் அவதிப்பட்ட அவனை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மிருதுல் பரிதாபமாக இறந்தான். கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு 3-வது உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவும்.
    • நோயில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வு டன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மூளையை தின்னும் அரிய வகை நோயான அமீபா நோய் பரவி வருகிறது. நெல்லேரியா பவுலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை நேரடியாக தாக்கும். இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவும். அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக அமீபா உடலுக்குள் சென்று விடும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, தூக்கமின்மை, கடுமையான தலைவலி, சுவையில் மாற்றம், கழுத்து வலி, மாறுபட்ட மனநிலை போன்றவை ஏற்படும்.

    இந்த நோயால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட நிவேடா என்ற பகுதியை சேர்ந்த உட்ரோ டர்னர் என்ற 2 வயது சிறுவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் அங்கு அவன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக அவனது தாய் பிரியனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் வெளியிட்டு உள்ளார். கடந்த 7 நாட்களாக அமீபா நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், தனது மகன் தான் எனக்கு ஹீரோ என்றும் உருக்கமாக அவர் தெரிவித்து உள்ளார். இந்த நோயில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • மாணவன் குருதத் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் சிலருடன் அங்குள்ள குளத்தில் குளிக்கச்சென்றான்.
    • சிறுவன் குருதத் இறப்பதற்கு அபூர்வ ‘பிரைமரி அமீபிக் மெனிஞ்சோயென்சி பாலிட்டிஸ்’ நோய் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா பானாவள்ளி பகுதியை சேர்ந்த அனில்குமார்-சாலினி தம்பதியின் மகன் குருதத்(வயது15). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    மாணவன் குருதத் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் சிலருடன் அங்குள்ள குளத்தில் குளிக்கச்சென்றான். குளத்தில் குளித்து விட்டு வந்த பிறகு அவனுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அதன் பிறகும் அவனுக்கு உடல் நிலை சரியாகவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக சம்பந்தம் இல்லாமல் பேச தொடங்கினான். அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் ஆலப்புழா அரசு மருத்துவமனையில் பெற்றோர் மூலம் சேர்க்கப்பட்டான்.

    அங்கு பரிசோதனை நடத்தியதில் மாணவன் குருதத், அமீபா தாக்குதல் காரணமாக பரவும் 'பிரைமரி அமீபிக் மெனிஞ்சோயென்சி பாலிட்டிஸ்' என்னும் அபூர்வ நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சிறுவன் குருதத் அங்கேயே சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அபூர்வ நோய்க்கு சிறுவன் பலியாகி உள்ள சம்பவம் கேரள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:-

    சிறுவன் குருதத் இறப்பதற்கு அபூர்வ 'பிரைமரி அமீபிக் மெனிஞ்சோயென்சி பாலிட்டிஸ்' நோய் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நோய் பாதிக்கிறது. இந்த நோய் தாக்கினால் 100 சதவீதம் மரணம் உறுதியாகும். இந்த நோய் தாக்கி கேரளாவில் இதுவரை 5 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.

    2016-ம் ஆண்டில் ஆலப்புழாவில் ஒருவரும், 2019 மற்றும் 2020-ல் மலப்புரம் மாவட்டத்தில் 2 பேரும், 2020-ல் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவரும், 2022-ல் திருச்சூர் மாவட்டத்தில் ஒருவரும் இந்த நோயிக்கு பலியாகி உள்ளனர்.

    இந்த நோய் தாக்குதலுக்கு ஓடாமல் தேங்கி கிடக்கும் தண்ணீரில் உள்ள அமீபா தான் காரணம். தேங்கி கிடக்கும் அது போன்ற தண்ணீரில் குளித்தாலோ அல்லது முகம் கழுவினாலோ மூக்கு வழியாக உடலுக்குள் அமீபா புகுந்து மூளையை தாக்கும்.

    இந்த அமீபாவை 'பிரைன் ஈட்டர்' என்று தான் அழைக்கப்படுகிறது. எனவே தேங்கி கிடக்கும் மற்றும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதையும், முகம் கழுவுவதையும் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×