search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடிபி"

    • இந்தியாவிலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் வென்றார்.
    • மின்னணு தபால் மூலம் வாக்குகளை பெற்றபோது செல்போனை இயக்கி மோசடி ?

    மும்பை வடமேற்கு தொகுதியில் ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றிருந்த உத்தவ் கட்சி வேட்பாளர், தபால் வாக்கு எண்ணப்பட்ட பிறகு 48 வாக்குகளில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

    மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளில் உத்தவ் கட்சி வேட்பாளர் அமோல் கிருத்திகர் 4,51,095 வாக்குகள் பெற்றார். ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் ரவீந்திர வெய்க்கர் 4,51,094 வாக்குகள் பெற்றார்.

    எனினும், தபால் வாக்குகளை எண்ணியபோது கிருத்திகருக்கு 1,501 வாக்குகளும் வெய்க்கருக்கு 1,550 வாக்குகளும் கிடைத்தன. முடிவில் 48 வாக்குகள் குறைவாகப் பெற்று உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளர் கிருத்திகர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் வென்றார்.

    இந்நிலையில், 48 வாக்குகளில் தோல்வி அடைந்த உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் அமோல் கிருத்திகர், மோசடி நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

    சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வெய்க்கரை எதிர்த்துப் போட்டியிட்ட அரோரா, பரத்ஷா அளித்த புகாரில் மும்பை போலீஸ் வழக்கு பதிந்துள்ளனர்.

    மின்னணு தபால் மூலம் வாக்குகளை பெற்றபோது செல்போனை இயக்கி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது, " மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வயர்லெஸ் தகவல் தொடர்பு திறன் இல்லை " என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க ஓடிபி எதுவும் தேவையில்லை.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ப்ரோக்ராமிங் செய்ய முடியாது என்பதால், அதனை திறப்பதற்கு ஓடிபி எதுவும் தேவையில்லை.

    குறிப்பிட்ட நிறுவனத்தால் பரப்பப்பட்ட முற்றிலும் பொய் செய்தி" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும்.
    • சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

    முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 98 வார்டுகளில் உள்ள 703 நியாய விலைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.

    குடும்ப அட்டை பயன்பாட்டில் இருக்கும் நியாயவிலைக் கடையில் நடைபெறும் முகாமில் குடும்பத் தலைவி டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இப்பதிவின் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வர வேண்டும்.

    விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்க தேவையில்லை. வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை.

    விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். விரல் ரேகை சரியாக பதிவாக வில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்ட கைப்பேசி வழியாக ஒரு முறை கடவுசொல் (ஓ.டி.பி.) பெறப்படும்.

    எனவே முகாமுக்கு வரும் போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசியை எடுத்து வர வேண்டும்.

    இதுகுறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044-25619208 எனும் தொலைபேசி எண்.94454 77205 எனும் வாட்ஸ் அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

    ×