search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுந்தரமூர்த்தி நாயனார்"

    • பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா.
    • சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர் சேரமான் பெருமான் நாயனார்.

    சைவ சமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், திருமணம் செய்ய முயன்ற போது, சிவபெருமான் கிழவன் வேடம் தரித்து சென்று, அதை தடுத்தார். சுந்தரரின் பிறவி நோக்கம், இறைவனை புகழ்ந்து பாடுவது என்பதை உணர்த்தி, சிவபெருமான் அவ்வாறு தடுத்தாட்கொண்டார்.

    அதன்பின், பல கோவில்களுக்கு சென்று, சிவபெருமானை பாடியுள்ளார். திருமணத்தை தடுத்த சிவபெருமானே, இரண்டு பெண்களை சுந்தரரருக்கு திருமணம் செய்து வைத்தார். பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    சிவபெருமான் மீது, பண்களுடன் 38 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். திருப்பூர், திருமுருகண்டி பூண்டியில் சுந்தரர் தங்கியிருந்த போது, சிவபெருமான், பூத கணங்களை அனுப்பி, பொருட்களை கவர செய்து, திருவிளையாடல் புரிந்தார்.

    அப்போது, வெஞ்சிலை வடுக வேடுவர் எனும் பதிகம் பாடியதால், அகம் மகிழ்ந்த இறைவன், சுந்தரரின் பாடலுக்காக, கவர்ந்த பொருட்களை கோவில் முன் குவித்தார்.

    சிவாலயங்கள் தோறும் பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்த சாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடக்கும். பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

    வெள்ளை யானை வாகனத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு, அருள்பாலித்தார்.

    சுந்தரமூர்த்தி நாயனாரிடம் நட்பு கொண்டு, அவருடனே பல கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கியவர்; சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர், கழறிற்றறிவார் நாயனார் எனப்படும் சேரமான் பெருமான் நாயனார்.

    அரசராக இருந்தாலும், சிவதொண்டையே பெரும் பாக்கியமாக கருதி, சுந்தரரோடு கயிலாயம் அடைந்த சேரமான் பெருமாள், குரு பூஜையும் இன்று.

    • மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியார் நாயனாரும் ஒருவர்.
    • தியாகராஜர் மீது பெரும் பக்தி கொண்டவராக இருந்தார்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் உள்ள மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியார் நாயனாரும் ஒருவர். இவர் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னையார் ஆவார். இவர் சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

    சுந்தரமூர்த்தி நாயனாரை மகனாய் பெற்றதாலாயே, தாயான இசைஞானி நாயனாரையும், தந்தையான சடைய நாயனாரையும் நாயன்மார்களாகக் கொண்டாடி மகிழும் பாக்கியம் பெறுகிறோம். சுந்தரமூர்த்தி நாயனார், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

    சோழவள நாட்டில், கமலாபுரத்தில் (திருவாரூர்) கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு இசைஞானியார் மகளாகப் பிறந்தார். சிறுவயது முதல் சிவபெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு சிறந்த சிவபக்தையாக வாழ்ந்தும், வளர்ந்தும் வந்தார்.

    இவர் திருவாரூரில் உள்ள தியாகராஜர் மீது பெரும் பக்தி கொண்டவராக இருந்தார். குழந்தைப் பருவம் முடிந்து திருமண பருவத்தை அடைந்ததும், இவர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில், ஆதி சைவ மரபில் வந்த சிறந்த சிவபக்தரான சடையனார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    சடையனாரிடம் பதிபக்தியுடனும், சிவபெருமானிடம் சிவ பக்தியுடனும் எவ்விதமான குறைகள் இன்றி வாழ்ந்து வந்தார். தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையை கருவில் சுமக்கும்போதே சிவ நாமங்கள் மற்றும் சிவஸ்துதிகளை கற்பித்தார். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை புத்திரனாகப் பெறும் பேறு பாக்கியத்தை இசைஞானியாருக்கு அருளினார்.

    இசைஞானியார் நாயனார் சிவபக்தியும், பதிபக்தியும் பூண்டு வாழ்ந்து திருதொண்டத்தொகை பாடி, உலகையெல்லாம் உய்வித்த தெய்வ மகனை பெற்று முடிவில் சிவபெருமானின் பாதகமலம் அடைந்தார்.

    சிவபக்தியில் சிறந்த இசைஞானியார் நாயனார் இறைத்தொண்டு செய்து, சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் திருநாவலூரில் (விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது) முக்தி அடைந்தார். அன்றில் இருந்து முக்தி அடைந்த நாளை எல்லா சிவாலயங்களிலும் குருபூஜை ஆக கொண்டாடப்படுகின்றது. அதாவது இன்று இசைஞானியார் நாயனார் குரு பூஜை தினம்.

    • 63 நாயகன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது.
    • விழாவிற்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், கிழக்கு ராஜா வீதியில் அமைந்துள்ள கைலாநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா வினை முன்னிட்டு விசேஷ அபிேஷகம், அல ங்கார பூஜைகள் மற்றும் 63 நாயகன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது.

    பூஜைகளை சென்னி மலை முருகன் கோவில் ஸ்தானீக அர்ச்சகர் சிவசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். விழாவில் சுந்தரமூ ர்த்தி நாயனார் உற்சவர் புறப்பாடும் சிறப்பாக நடந்தது.

    விழாவிற்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாய ன்மார்களை வழிபட்டனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×