என் மலர்
நீங்கள் தேடியது "மழை வேண்டி"
- பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மயிலைமலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
- நூற்றுக்கணக்கான பெண்கள் சிறுதானியங்களில் கூழ் சமைத்து அம்மன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மயிலைமலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் இந்த அம்மன் கோவிலில் திருவிழா, நேற்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் சிறுதானியங்களில் கூழ் சமைத்து அம்மன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி கூழ் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். சக்தி வாய்ந்த தெய்வமான முத்து மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்துள்ளதால் நல்ல மழை பெய்து வறட்சி நீங்கி வளம் கொழிக்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






