search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீட்டுத்தொகை"

    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணம் ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஏக்கருக்கு ரூ.5400 அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிர் 98 ஆயிரத்து 314 ஹெக்டேரிலும், மக்கா சோளம் 40 ஹெக்டேரில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குரிய வறட்சி நிவாரணமாக ரூ.132 கோடியே 71 லட்சம் பேரிடர் மேலாண்மை நிதியாக கோரப்பட்டு உள்ளது.

    கடந்த 2022-23ம் ஆண்டில் சம்பா பருவத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 859 எக்டேரில் நெல் சாகுபடி நடந்தது. வட கிழக்கு பருவ மழை -2022ல் குறைவாக பெய்துள்ளதால் அறுவடை நேரத்தில் நெல், மக்கா சோளப்பயிர்கள் மகசூல் பாதிப்படைந்தன.

    கடந்த பிப்ரவரி மாதம் வருவாய்த் துறை, வேளாண்துறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுத்தனர். இதில் நெல்- 98 ஆயிரத்து 314 ஹெக்டேரும், மக்காச்சோளம் - 40 ஹெக்டேரும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய இழப்பீட்டுத்தொகை ரூ.132 கோடியே 71 லட்சம் பேரிடர் மேலாண்மை நிதி கோரி அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அறிக்கை அனுப்பினர்.

    தொடர்ந்து விவசாய சங்கங்கள் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதன் விளை வாக 2022ம் ஆண்டு பேரி டர் மேலாண்மை, மழை குறைவால் 33 சதவீதத்திற்கு மேலாக பயிர் தேசம் ஏற்பட்ட ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங் ளை மிதமான வேளாண் வறட்சி' என அரசு நிவாரணம் வழங்க ஆணை வெளியிட்டுள்ளது.

    இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 வட்டாரங் களுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.132 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 775 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 34 ஆயிரத்து 305 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5400 வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

    ×