search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக வட்டி தருவதாக கூறும்"

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • அதிக வட்டி தருவதாகவும் கூறும் நபர்களிடம் பொது மக்கள் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பி ரிவு போலீஸ் டி.எஸ்.பி. முருகானந்தம் அறிவுறுத்தலின் பெயரில் கோபி அருகே உள்ள சவுண்டப்பூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    இதில் கவர்ச்சிகர திட்டங்கள் மூலம் பணம் இரட்டிப்பு, அதாவது ஆயிரம் ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு ரூ.5000 தருவதாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கினைவிட அதிக வட்டி தருவதாகவும் கூறும் நபர்களிடம் பொது மக்கள் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

    அந்த மோசடி நபர்கள் முதலில் ஆசை காட்டி சேர்க்கும் 10 அல்லது 20 பேருக்கு அதிக லாபம் கொடுத்து விட்டு, அதற்கு பின்னால் சேர்ப்ப வர்களுக்கு லாபத்தையும் கொடுக்காமல் முதலீடு செய்த பணத்தை தராமல் ஏமாற்றி விடுவார்கள்.

    எந்த ஒரு நிறுவனமும் முதலீடு செய்த பணத்திற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை விட கூடுதலாக வட்டி தர முடியா து. எனவே பொதுமக்கள் கவர்ச்சிகரத் திட்டங்களை பார்த்தும் ஆசை வார்த்தைகளை கேட்டும் பணத்தை முதலீடு செய்து ஏமர வேண்டாம்.

    அதேப்போல் அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறாத ஏலச்சீட்டுகளிலும் சேர்ந்து பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முதலீடு செய்யும் பணத்துக்கு முறையான ரசீது வழங்கப்படுகிறதா? கடன் ஒப்பந்த நகல் வழங்கப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து உறுதி தன்மை இருந்தால் மட்டுமே பணத்தை முதலீடு செய்யுங்கள்.

    ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஈரோடு பொருளாதார குற்றப்பி ரிவு போலீஸ் நிலையத்தை நேரில் அணுக லாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×