search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டவுன் ரெயில் நிலையம்"

    • வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பேவர்பிளாக் பதிப்பு
    • விரிவாக்கம் பணிகள் தீவிரம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம், நாகர் கோவிலில் சந்திப்பு, டவுன் என 2 ரெயில் நிலை யங்கள் உள்ளன.

    இதில் சந்திப்பு ரெயில் நிலையம் மிக முக்கியமானதாக விளங்கு கிறது. இங்கி ருந்து திருநெல்வேலி, திருவ னந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரெயில்களும், கன்னியாகுமரி செல்லும் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. இது புதிய ரெயில்கள் இயக்கத்திற்கும் தடையாக அமைந்தது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் புத்துயிர் பெற தொடங்கியது. அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முதல் கட்டமாக செய்யப்பட்டன. மேலும் நாகர்கோவில் சந்திப்பில் ஏற்படும் இட நெருக்கடி பிரச்சி னையை தீர்க்க, திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி, சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் போன்றவை சந்திப்பு ரெயில் நிலையம் வராமல், நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக செல்லும் வகையில் மாற்றப்பட்டது.

    இது தவிர நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேலி, கொல்லம் மெமு ரெயில், கோட்டயம் பகுதிகளுக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில்கள் டவுன் நிலையத்தில் நின்று செல்கிறது. விரைவில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும், சந்திப்பு ரெயில் நிலையம் வராமல் டவுன் நிலையம் வழியாக இயக்கப்பட உள்ளது. முக்கிய ரெயில்கள் டவுன் நிலையத்தில் நின்று செல்வதால், பயணிகளின் வரத்தும் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு முன்பதிவு மையம், பயணிகள் தங்கும் அறை, சிக்னல் மையம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து டவுன் நிலை யத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையம் வரும் பயணிகள், தங்கள் வாக னங்களை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரெயில் நிலைய வாசலில் பிரமாண்ட நுழைவு வரில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அளவீடு பணிகள் முடிந்துள்ளன.

    மேலும் நடைமேடையில் ஒரு சில இடங்களில் மேற்கூரைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகளால் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் புதுப்பொலிவை பெற்று வருகிறது.

    ×