search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூடக்கோரி"

    • கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது.
    • கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது. இந்த பெட்ரோல் பங்க் அமைக்கும்பணியை தடுத்து நிறுத்த கோரி சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    இருப்பினும் மீன வர்களின் இந்த தொடர் போராட்டத்துக்கு இடையே பெட்ரோல்பங்கு நேற்று திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு சின்ன முட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து சின்ன முட்டத்தில் திறக்கப்பட்டு உள்ள பெட்ரோல்பங்கை மூடக்கோரி சின்ன முட்டத்தில் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இதனால் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட விசைப்படகுகளும் 100-க்கு கட் ம் மேற்பட்டநாட்டுபடகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.இதனால் இந்த விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சின்னமுட்டம் புனிததோமையார்ஆலயம் முன்புமீனவர்கள் இன்று 2-வதுநாளாக உண்ணாவிரத போராட்ட மும்நடத்திவந்தனர். இதைத் தொடர்ந்து சின்னமுட்டத்தில் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் இதுவரை எந்தவித சமரச தீர்வும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று17- வது நாளாக சின்னமுட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு எதிராக மீனவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வெள்ளியல்பாறை பகுதியில் கையில் கருப்பு கொடியை ஏந்தி கடலில் இறங்கி முட்டளவு தண்ணீரில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள், மீனவ பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

    ×