search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநலன்"

    • ஐடி நிறுவனங்கள் தான் Work from Home நடைமுறையை கொண்டு வந்தன.
    • அமெரிக்காவைச் சேர்ந்த Sapien Labs ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.

    கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்தனர். அந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்து வேலை செய்யும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

    அமேசான் மற்றும் இன்ஃபோசிஸ் மற்றும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதிகளை வழங்கின.


    கொரோனா தொற்று கட்டுக்குள் வரத்தொடங்கிய பிறகும் சில ஆண்டுகளாக இன்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை வழங்குகின்றன.

    ஆனால் நீண்ட நேரம் வீட்டில் இருந்து வேலை செய்வது மக்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

    சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான Sapien Labs உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மனநலம், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை விட சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளது.

    அலுவலகத்தில் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதும், அலுவலகத்தில் உள்ள சூழலும் மன நலனில் பெரும் பங்கு வகிப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    65 நாடுகளைச் சேர்ந்த 54,000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். மனநலத்தை மேம்படுத்துவதில் சக ஊழியர்களுடனான உறவு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.


    இந்தியாவில், வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலம் சிறப்பாக இருப்பதாகவும், மேலும் ஊழியர்களின் சிரமத்திற்கு பணிச்சுமையே முக்கிய காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலை போன்ற காரணங்கள் அடிக்கடி வலியுறுத்தப்படும் அதே வேளையில், வேலை செய்யும் இடத்தில் நல்ல உறவுகள் மற்றும் வேலையில் பெருமைப்படுதல் ஆகியவை மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை என்று அறிக்கை காட்டுகிறது.


    அதேசமயம் இந்தியாவில், அலுவலகத்திலிருந்து பணிபுரியும் பணியாளர்கள் சிறந்த மனநலத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. மற்ற நாடுகளை விட இந்திய ஊழியர்களிடையே குழுப்பணியின் காரணமாக மனநலம் மேம்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


    முழுக்க முழுக்க வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் சோகமாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர வாய்ப்புள்ளது. முற்றிலும் வீட்டிலிருந்து வேலை செய்வது குழப்பம், தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

    • சுயமாகவே கூட கலர் தெரபி செய்யலாம்.
    • நிறங்களுக்கும், மன நலனுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.

    நிறங்களுக்கும், மன நலனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை அதற்கு உண்டு. நிறங்களை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் 'கலர் தெரபி' சிகிச்சையை பலரும் விரும்புகிறார்கள்.

    சுயமாகவே கூட கலர் தெரபி செய்யலாம். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? சிவப்பு நிறத்தில் உடை, சிவப்பு நிற ஷு அணிந்து செல்லலாம். சிவப்பு நிற துண்டு, சிவப்பு வண்ண தண்ணீர் பாட்டில், சிவப்பு நிற பேக் எடுத்து செல்லலாம். அங்கு உடற்பயிற்சி செய்யும்போது உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை சிவப்பு நிறத்திற்கு இருக்கிறது.

    தன்னம்பிக்கையை இழந்து சோர்ந்து போய் இருப்பவர்களை சிவப்பு மற்றும் கருப்பு நிறம் ஆசுவாசப்படுத்தும். அதில் இருந்து மீளவைத்து உற்சாகமான மனநிலைக்கு இட்டு செல்லும்.

    நீண்ட நாள் கனவான விரும்பிய வேலைக்கு நேர்காணல் செல்கிறீர்களா? சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த ஆடையை உடுத்தி செல்லலாம். இந்த நிறங்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையவை. தன்னம்பிக்கைதரும். மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி புத்துணர்வு அளிக்கச் செய்யும்.

    ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் மகிழ்ச்சியான மனநிலைக்கு இட்டுச்செல்லக்கூடியவை. பெண்கள் தங்கள் துணி அலமாரியை ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கலாம். அந்த நிறங்கள் கொண்ட துணிகளை அதில் இடம் பெற செய்யலாம். அந்த நிறங்கள் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் தொடர்புடையவை.

    ஏதாவதொரு காரியத்தில் கவனம் செலுத்தும்போது நீல நிறத்தை தேர்வு செய்யலாம். அது அமைதியான மனநிலைக்கு வித்திடும். வேறு பக்கம் கவனம் திரும்பாமல் பார்த்துக்கொள்ளும். சிந்தனை திறனையும் மேம்படுத்தும்.

    சுப நிகழ்ச்சிகளுக்காக வீட்டை அலங்கரிக்கும்போது ஆரஞ்சு நிறத்தை தேர்வு செய்யலாம். அதிலும் பார்ட்டி போன்ற விருந்து உபசரிப்பு நிகழ்வுகளுக்கு ஆரஞ்சு நிறம் சிறந்த தேர்வாக இருக்கும். அது விழாவுக்கான உற்சாகத்தை அதிகப்படுத்தும். அனைவருடைய கவனத்தையும் சட்டென்று ஈர்க்கும் விதத்திலும் அமைந்திருக்கும்.

    • மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தமிழியல் துறை சங்க பலகை இலக்கிய மன்றம் சார்பில் மனம் நிரல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி உடல்நலம், மனநலம் குறித்து பேசினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிவகாசி அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர், மாவட்ட மனநல மருத்துவ திட்ட அதிகாரி நித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மனநல மருத்துவர் இளையராஜா மனதை பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், மனகட்டுப்பாடு குறித்தும் பேசினார்.

    முன்னதாக மாணவி அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். மாணவி மாலதி நன்றி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    ×