search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணைகள்-"

    • பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 6.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மாம்பழத் துறையாறு, பாலமோர் பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 6.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி, களியல், குழித்துறை, ஆணைக் கிடங்கு, முக்கடல் அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப் பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலையில் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவி கள் குடைபிடித்தவாறு சென்றனர்.

    குலசேகரம், தக்கலை, இரணியல், குளச்சல் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.55 அடி யாக உள்ளது. அணைக்கு 455 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. அணைக்கு 197 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    ×