என் மலர்
நீங்கள் தேடியது "உபகார மாதா"
- நாளை தொடங்குகிறது
- திருத்தலம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்று வந்த திருவிழா பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் மாற்றி வைக்கப்பட்டது.
இருப்பினும் பாரம்பரிய மாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் தேதிப்படி திருவிழா என்று நடை பெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், மாலை ஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 2-வது நாளான 24-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும் முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனியும் அதைத் தொடர்ந்து மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை உபால்டு, பங்குப்பேரவை துணை தலைவர் செல்வ ராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.