search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜர்சனம்"

    • நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
    • தொடக்க பூஜைக்குப்பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டது.

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டடிருந்த விநாயகர் சிலைகள் சின்னவிளை கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. மணவாளக்குறிச்சி ஜங்சன், புதுக்கடை தெரு, பம்மத்து மூலை, வடக்கன்பாகம், பிடாகை, சேரமங்கலம், பெரியகுளம் ஜங்ஷன் ஆகிய 7 இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8 சிலைகளும் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் வந்து, அங்கு நடந்த தொடக்க பூஜைக்குப்பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டது.

    இந்து முன்னணி மாவட்ட ஆலோசகர் மிசா சோமன் துவக்க உரையாற்றினார். மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோவிலுக்கும் ஊர்வலம் சென்று மாலை ஜங்ஷன் வந்தடைந்தது. பின்னர் சின்னவிளை கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

    விஜர்சன விழாவிற்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க மாவட்ட உதவி துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கல்குளம் தாசில்தார் கண்ணன், சிறப்பு தாசில்தார் ரமேஷ், குளச்சல் ஆர்.ஐ. முத்து பாண்டி, மணவாளக்குறிச்சி வில்லேஜ் ஆபீசர் பாலமுருகன், மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்கு செயல் அலுவலர் ஏசுபாலன் ஆகியோர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

    ×