search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tillage தூய்மை இந்தியா"

    • அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பைங்காநாடு சிவன் கோயில் வளாகத்தில் உழவாரப்பணி நடந்தது.
    • தூய்மை இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வலியுறுத்தியதுடன் உண்மை, அகிம்சை ஆகியவை சொற்கள் அல்ல செயல்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேனிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பைங்காநாடு சிவன் கோயில் வளாகத்தில் உழவாரப்பணி நடை பெற்றது.

    ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.

    பைங்காநாடுஅரசுமேனிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அசோகன், முன்னாள் தலைவர் மலர்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேனிலைப் பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் முனைவர் இராசகணேசன் தொடங்கி வைத்து பேசும்போது, காந்தியடிகளின் பிறந்தநாளில் மகாத்மா காண விரும்பிய தூய்மை இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வலியுறுத்தியதுடன் உண்மை, அகிம்சை ஆகியவை சொற்கள் அல்ல செயல்கள்.

    இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தாலே வாழ்வின் பயனை நாம் உணரலாம்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அடுத்தொரு பிறவி எடுத்தாவது திருக்குறளைமுழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய மகாத்மாகாந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை நூலை அனைவரும் படிக்க வேண்டும்.

    காந்திய சிந்தனை உலக உய்விற்கான வழி, அதனால்தான் உலக நாடுகள் எல்லாம் காந்தியின் தனிமனித வாழ்க்கையிலிருந்து நிறைய பாடங்களைக் கற்று வருகின்றன என்று கூறியதுடன்பாரதியாரின் காந்திபுகழ் வணக்க பாடல்களையும், ரகுபதி ராகவ ராஜாராம் காந்தி பஜனைப் பாடலையும் பாடினார்.

    முன்னதாக அனைவரையும் திட்ட அலுவலர் பிரான்சினா விண்ணரசி வரவேற்றார். முடிவில் உதவித்திட்ட அலுவலர் சுசீலா நன்றி கூறினார். தமிழாசிரியை இசபெல்லா நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

    ×