search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுவே"

    • விவசாய சங்கம் கோரிக்கை
    • தமிழக முதல்வர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    கருங்கல்:

    மிடாலம் ஊராட்சி பகுதியில் உள்ளது பாறை குளம். மிடாலம் பி கிராமத்தில் புல. எண். 219/3- உள்ள இக்குளம் 2.45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்குளத்தில் சிற்றாறு பட்டணங்கால் தண்ணீரை தேக்கி வைத்து அப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு பயன் படுத்தி வருகின்றனர். இக்குளத்து நீரை நம்பியே அப்பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் வாழை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.மட்டுமல்லாமல் மிடாலம் ஊராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவதும் இப்பாறைகுளமே.

    இந்நிலையில், சில தனிநபர்களின் நிலத்துக்கு சாலை கொண்டு செல்வ தற்காக இந்த குளத்தின் நடுப்பகுதியில் பக்கச்சுவர் எழுப்பி இந்த குளத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். நீர் நிலைகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறியும், பொதுப்பணித்துறை அனுமதி பெறாமலும் குளத்தின் நடுவே தடுப்பு சுவர் எழுப்பி உள்ள செயல் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் இப்பணியை துவங்கிய கடமை தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிள்ளியூர் வட்டார விவசாய ஆலோ சனை குழு தலைவர் கோபால் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பொதுமக்கள், விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுத்து உள்ளார். மேலும் இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    ×