என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1.50 லட்சம் பறிமுதல்"

    • திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தினர்.
    • சோதனை நடத்திய போது ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாண்டியன் நகர் 3-வது தெருவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் அதிர டியாக அலுவலகத்துக்குள் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அலுவலக கண்காணி ப்பாளர் மருதநாயகம் அறைக்கு சென்று சோதனை நடத்திய போது ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் குறித்து அ வரிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்க வில்லை.

    இதனைத் தொடர்ந்து கணக்கில் வராத அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு த்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்குள்ள அலுவலர்களிட மும் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் அரசு அலுவலர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து அளிக்கும் புகார்களின் அடிப்படையில் இது போன்ற சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 மாதம் உள்ள நிலையில் தற்போதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    ×