என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீட்டு பூட்டை உடைத்து"
- கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
- பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (32). கார்பென்டராக வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
அதிர்ச்சியடைந்த கண்ணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கண்ணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.