search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளங்களால் மக்கள் அவதி"

    • மழை நீர் வடிகால் பணி அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது.
    • வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அண்ணா மடுவு வரை இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை விரி வா க்கம் பணி நடந்து வருகிறது.

    அந்தியூர் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு விழா மற்றும் பண்டிகை காலங்களில் வியாபாரம் நடப்பது வழக்கம். இந்த நிலையில் பஸ் நிலையம் பகுதியில் மழை நீர் வடிகால் பணி அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது.

    தற்சமயம் பண்டிகை காலம் தொடங்கி உள்ளது. மேலும் நவம்பர் 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படு கிறது.

    தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரு வதால் கடைகள் முன்பு பள்ளங்கள் தோண்டினால் அந்த பகுதியில் கடை நடத்துபவர்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    அதன் பிறகு தற்போது இந்த தீபாவளி பண்டிகை வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருக்கும் நிலையில் கடைகள் முன்பு பள்ளங்கள் தோண்டப்பட்டு இருப்பதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    பஸ் நிலையம் பகுதி களில் கடைகளில் அதிக வாடகை கொடுத்து கடை வைத்து நடத்தி வருகிறோம்.

    பண்டிகை காலங்களில் நடக்கும் வியாபராத்தை நம்பி தான் இருக்கிறோம். தற்போது தீபாவளி நேரத்தில் வியாபாரம் நடைபெறாமல் இருப்ப தனால் கடுமையாக பாதிக்க பட்டு வருகிறோம். மேலும் வாடகை கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    எனவே அந்தியூர் பகுதி யில் நடக்கும் பணி களை விரைவில் முடிக்க வேண்டும் என அந்த பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டு கொண்டனர்.

    மேலும் கடைகளுக்கு வரும் பொது மக்களும் கடைகளுக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

    இதே போல் அத்தாணி சாலை பொறிக்கடை கார்னர் பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்க பள்ளங்கள் தோண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் அங்கு பணிகள் தொடங்கப்படாத நிலையே இருந்து வருகிறது.

    இந்த பள்ளங்களால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் அந்த பள்ளத்தில் விழும் நிலையும் உள்ளது. இது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

    எனவே பண்டிகை காலம் வருவதற்குள் அந்த பணிகளை விரைவில் முடி த்து தர வேண்டும் என்று வியாபாரிகளும் பொது மக்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களும் தன்னார்வ லர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    ×