search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு வெடிகுண்டு வீச்சு"

    • முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர்.
    • சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    சோழவரம்:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சோழவரம் கிராமத்தில் கோட்டைமேடு காலனி கென்னடி தெருவில் வசித்து வருபவர் ஜெகன் (வயது 38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி அபிஷாபிரியாவர்ஷினி (33) சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

    நேற்று மாலை முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. வீட்டில் இருந்த ஜெகன் வெளியே வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே தப்பி சென்ற அதே மர்ம கும்பல் சோழவரம் நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்திற்கு சென்று அங்கு வேலை செய்து வரும் சோழவரம் கோட்டைமேடு காலனியை சேர்ந்த லாரி டிரைவர் சிவா (30) என்பவரிடம் சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் கையில் வெட்டி விட்டு லாரி நிறுத்தும் இடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.

    தொடர்ந்து ஆங்காடு ஊராட்சியில் உள்ள சிறுணியம் காலனி கெங்கையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வியாபாரி சரண்ராஜ் (38) என்பவர் கார் கண்ணாடிகளை உடைத்து கலாட்டா செய்தனர். சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இச்சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் சோழவரம் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி அரசியல் பிரமுகர், வியாபாரிகளை அச்சுறுத்தி மாமூல் பெறும் நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சோழவரம், சிறுணியம் ஆகிய பகுதிகளில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்தி உள்ளது.

    • ரவுடி மணிகண்டன் வீட்டின் மீது 3 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
    • ரவுடி வீட்டை குறி வைத்து மர்ம நபர் நாட்டு வெடிகுண்டை வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பூர்வீகம் திருச்சி மேல கொண்டயம்பேட்டை ஆகும்.

    பிரபல ரவுடியான மணிகண்டன் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.

    கடந்த 2021ல் ஆட்டோ முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் மணி கண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் முருகன் ஆதரவாளர்கள் அவருக்கு குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு ரவுடி மணிகண்டன் வீட்டின் மீது 3 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் பார்த்தபோது வீட்டின் நிலை கதவு கண்ணாடி உடைந்து கிடந்தது. வாசலில் நாட்டு வெடி துகள்கள் சிதறி கிடந்தன. ரவுடி மணிகண்டனை குறி வைத்து வெடிகுண்டு வீசினர். ஆனால் அந்த குண்டு குறி தவறி வாசலில் வெடித்துள்ளது. இதனால் அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்க நாதன் மற்றும் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அன்பு மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் நாட்டு வெடிகுண்டுக்கான எந்த மூலப்பொருட்களும் அங்கு கண்டறியப்படவில்லை.

    ஆகவே வீசப்பட்டது வெங்காய வெடி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ரவுடி வீட்டை குறி வைத்து மர்ம நபர் நாட்டு வெடிகுண்டை வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் எதிரிகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

    இந்த சம்பவம் திருவானைக்காவல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×