search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியார் நினைவிடம்"

    • 8 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது
    • பழமை தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது

    திருவண்ணாமலை:

    கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவிடம் சீரமைக்கப்படும் என தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    8 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் நினைவிடம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என 2 தளங்களும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் நூலகம், அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா, திறந்தவெளி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    நினைவிடத்தில் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகியவை அதன் பழமை தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், சிறப்பு அலுவலர் விஸ்வநாத், முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கோவை மண்டல தலைமை பொறியாளர் காசிலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×