என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமானுஜர்"
- மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர் ராமானுஜர்.
- மிகச் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதி.
மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர், ராமானுஜர். இவர் சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்து, வைணவ சமயத்திற்காக தொண்டாற்றியவர். ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே, அவருக்கு கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு, அவர் மீது பற்று கொண்டவர்கள் இருந்தனா். மிகச் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக அந்த காலத்திலேயே திகழ்ந்தவர் இவர்.
ராமானுஜரின் மூன்று திருமேனிகள் சிறப்புக்குரியவை. அவை:-
தமர் உகந்த திருமேனி, தான் உகந்த திருமேனி, தானான திருமேனி. இந்த மூன்று திருமேனிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தமர் உகந்த திருமேனி
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ளது, மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம். இங்கு சுமார் 12 ஆண்டுகள் தங்கியிருந்து சேவை புரிந்து வந்தார், ராமானுஜர். தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, ராமானுஜர் புரட்சி செய்ததும் இந்த திருத்தலத்தில்தான்.
தன்னுடைய 80-வது வயதில், தன்னை ஏற்றுக்கொண்ட அடியவர்களுக்காக, தானே ஒரு சிற்பியை கொண்டு ஒரு சிலையை வடிக்கச் சொன்னார். ராமானுஜர் கைகூப்பி அனைவரிடமும் விடைபெறும் கோலத்தில் அந்தச் சிலை வடிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையில் தன்னுடைய தெய்வீக சக்தியை செலுத்தி, அதைத் தன்னுடைய சீடர்களிடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகே திருநாராயணபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவரங்கம் சென்றார். இந்த சிலையை 'தமர் உகந்த திருமேனி' என்பர். இன்றும் மேல்கோட்டையில் இந்த திருவுருவச் சிலையை வழிபாடு செய்யலாம்.
தான் உகந்த திருமேனி
இந்த திருமேனி நிறுவப்பட்டிருக்கும் திருத்தலம், காஞ்சிபுரம் அருகே உள்ள, ஸ்ரீபெரும்புதூர் ஆகும். ராமானுஜப் பெருமாள், தன்னுடைய இறுதி காலங்களில், அதாவது 120-வது வயதில் திருவரங்கத்தில் தங்கியிருந்தார்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்த ராமானுஜரின் அடியவர்கள், அவரது திருவுருவச் சிலையை, ஸ்ரீபெரும்புதூரில் நிறுவ ஆசைப்பட்டனர். இதற்காக ராமானுஜரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. பின்னர் ராமானுஜரின் ஆலோசனைப்படி, அவர் உருவம் தாங்கிய செப்புச் சிலை ஒன்று செதுக்கப்பட்டது.
அந்த சிலையை தன் மார்போடு அரவணைத்து, அந்த சிலைக்குள் தன்னுடைய தெய்வீக ஆற்றலை செலுத்தினார், ராமானுஜர். இந்த சிலையே 'தான் உகந்த திருமேனி' என்று அழைக்கப்படுகிறது. ராமானுஜர், தாமாகவே உகந்து அளித்த திருமேனி இதுவாகும்.
அந்த சிலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நிறுவப்பட்டு, ராமானுஜர் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த சிலையில் உள்ள விலா எலும்பு, காது மடல் போன்றவை, ராமானுஜரின் 120 வயது தோற்றத்தை தெளிவாக எடுத்துக் காட்டும் விதத்தில் இருக்கிறது.
தானான திருமேனி
ராமானுஜர் தன்னுடைய 120-வது வயதில் பரமபத நிலையை எய்தினார். கி.பி. 1137-ம் ஆண்டு, தான் பிறந்த அதே பிங்கள வருடத்தில் மாசி மாதம் வளர்பிறை தசமியில், ஒரு சனிக்கிழமை நண்பகல் வேளையில் பத்மாசன நிலையில் அமர்ந்தபடி திருவரங்கத்தில் சமாதியானார்.
அதற்கு முன்பு வரை வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட அந்த இடம், ராமானுஜரின் திருமேனியை, திருப்பள்ளிப்படுத்தியபிறகு, உடையவர் சன்னிதி என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ராமானுஜரின் பூத உடலை, இன்றும் நாம் தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் தலைமுடி, கை நகம் போன்றவற்றைக் கூட எளிதாக காண இயலும்.
திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள இந்த திருமேனியைத் தான் 'தானான திருமேனி' என்று அழைக்கிறோம். ஒவ்வொரு வருடமும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பச்சை கற்பூரம் மற்றும் சில மூலிகைகள் அரைத்து ராமானுஜரின் திருமேனியில் சாற்றுவார்கள்.
ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீராமானுஜர் திருமேனி பாதுகாக்கப்படுவது, இந்த முறையில்தான் என்கின்றனர் ஆன்மிகப் பெரியவர்கள். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜரை வணங்கினால், அந்த இறைவனின் அருளையும் சேர்த்தே பெறலாம்.
- திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.
- கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார்.
திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது. தாயார் சன்னதி கூட கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.
திருமலையின் ஆதிமூர்த்தியான வராக சாமி தெப்ப குளக்கரையில்தான் இருக்கிறார். ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே. திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.
ராமானுஜர் 1017-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். 1137-ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார். திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுjஅர் தான்.
அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவ கோவிலா? வைணவ கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.
ராமானுஜர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.
ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார். காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது.
இன்றும் அங்கு 'ராமானுஜர் வீதி' இருக்கிறது. கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது 'ராமானுஜர் நந்தவனம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.
ஏழுமலை ஏறி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார். அதுவே 'ராமானுஜக் கூடம் ஆனது'. இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக அன்றே 'சமபந்தி' சாப்பாட்டை ராமானுஜர் தொடங்கி வைத்து விட்டார்.
ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுஜரே!
ஏழுமலையானுக்கு பச்சை கற்பூர நாமம் சாத்தவும் ராமானுஜரே ஏற்பாடு செய்தார். சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.
இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூஜையையும் ராமானுஜர் வகுத்துக் கொடுத்தார்.
மலை அடிவாரத்தில் கீழ் திருப்பதி ஊரையும் உருவாக்கினார். இப்படி ஏழுமலையான் கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுஜர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.
ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.
- திருமணம் - கி.பி. 1033ல் 16-வது வயதில்
- மனைவி - தஞ்சமாம்பாள் என்கிற ரக்ஷகாம்பாள்
பிறப்பு- கி.பி. 1017 பிங்கள ஆண்டு சித்திரைத் திங்கள்
பிறந்த ஊர் - பூதபுரி எனும் ஸ்ரீபெரும்புதூர்
தந்தையார் - ஆசாரி கேசவ சோமயாஜி பட்டாசாரி
தாய் - காந்திமதி எனும் பூமிப் பிராட்டியார்
காதுகுத்தல் வைபவம் - கி.பி.1022
உபநயனம் - கி.பி.1025
திருமணம் - கி.பி. 1033ல் 16-வது வயதில்
மனைவி - தஞ்சமாம்பாள் என்கிற ரக்ஷகாம்பாள்
காஞ்சீபுரத்தில் தனிக்குடித்தனம் - கி.பி.1034
காசி யாத்திரை - 1035
ஸ்ரீ ஆளவந்தார் சந்திப்பு - கி.பி. 1041
ராமானுஜர் சந்தியாசம் - 1047
திருக்கோட்டியூர் நம்பி சந்திப்பு - 1049
திருமலை திருப்பதி வாசம் - 1051
ஸ்ரீபாஷ்யம் எனும் வேதநூல் எழுதியது - கி.பி. 1051-1055
திருமலைதிருப்பதி திருப்பணிகள் - கி.பி. 1057
ஸ்ரீரங்கநாத சாம்ராஜ்ய நிர்வாக பொறுப்பு - 1058- 1089
திக்விஜயம் - கி.பி. 1089- 1095
கூர்மஷேத்திர திருப்பணி - கி.பி. 1094 - 1095
மைசூர் தேசம் சென்றது - கி.பி.1097 - 1098
தொண்டனூர் ராஜகுருவாக பிரகடனம் - கி.பி. 1110
டில்லி சுல்தான் குமாரியிடம் விக்ரகம் பெற்ற சம்பவம் 1101-1104
ஸ்ரீரங்கம் திரும்புதல் - கி.பி. 1111- 1112
ஸ்ரீ ராமானுஜர் மோட்ச கதி அடைதல் - 22.1.1138
- அவதரிதது 120 ஆண்டுகள் கழித்து, அவர் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் அத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- உடையவர் கந்த அந்த மூர்த்தத்தை ‘தாம் உகந்த திருமேனி’ என்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்த பக்தர்கள் வேதம் வகுத்த நெறியில் தம்முடைய விக்கிரகம் ஒன்றைச் செய்து பிரதிஷ்டை செய்ததைத் தான் மவுன நிலையில் கண்டதாகக் கூறினார்.
எவருக்கும் தங்களுடைய வாழ்நாளில் தங்கள் பிறந்த மண்ணில் சிறப்புகள் கிட்டுவது அரிது.
ராமானுஜருக்கு அச்சிறப்பு கிட்டியது. தமது வாழ்நாளுக்கு பிறகும் தம்முடைய அவதாரத் தலத்தில் அர்ச்சா வடிவத்தில் எழுந்தருளுவது ராமானுஜருக்கு உகப்பாகவே இருந்தது.
அவதரிதது 120 ஆண்டுகள் கழித்து, அவர் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் அத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உடையவர் கந்த அந்த மூர்த்தத்தை 'தாம் உகந்த திருமேனி' என்றனர்.
- அவர் அங்கு ஞானச்செங்கோல் ஓச்சிய காலத்தில் ஏற்படுத்திய நெறிமுறைகள் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன.
- கோவிற்கலைகளில் வல்லவர்களான பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்தார்.
ராமானுஜர் திருநாராயணபுரம் செல்வதற்கு முன்னால் 30 ஆண்டுகளும், அங்கிருந்து திரும்பி வந்த பிறகு 20 ஆண்டுகளும் ஆக மொத்தம் 50 ஆண்டுகள் திருவரங்கன் திருத்தொண்டுகள் புரிந்தார்.
அவர் அங்கு ஞானச்செங்கோல் ஓச்சிய காலத்தில் ஏற்படுத்திய நெறிமுறைகள் இன்றளவு வைணவத் திருத்தல்களில் பின்பற்றப்படுகின்றன.
கோவிற்கலைகளில் வல்லவர்களான பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்தார்.
திருவீதிகளில் வேதங்கள் மற்றும் பிரபந்தங்களை ஓதச் செய்தார். அவற்றைக் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.
சோழச் சிற்றரசன் அகளங்கனிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்து, அது வெவ்வனே செயற்பட வழிவகுத்தார்.
அரங்கனுக்குரிய நிவேதனங்கள் குறைவின்றித் தளிகை செய்யப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் தாராளமாக வழங்கப்பட்டன.
திருக்கோவிலைச் சுற்றி மண்டபங்கள், நந்தவனங்கள், மலர்ச்சோலைகள், மருத்துவமனைகள், நூல் நிலையங்கள் போன்ற அனைத்தும் நிறுவப்பட்டன.
மொத்தத்தில் திருக்கோவில் அமைதி அளிக்கும் வழிபாட்டுத் தலமாகவும், கலைகளை வளர்க்கும் இடமாகவும், மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அறச்சாலையாகவும் விளங்கின.
குறிப்பாக, திருக்கோவிலில் சமத்துவ பக்தி நிலவச் செய்ததில் ராமானுஜர் முன்னோடியாக திகழ்ந்தார்.
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று அனைவரும் போற்றும் அளவிற்கு திருவரங்கத்தைச் செழிக்கச் செய்தார் உடையவராகிய ராமானுஜர்.
நூற்றிருபது வயது முதுமையிலும் ராமானுஜர் சீடர்களுக்குப் பாடம் கற்பித்து வந்தார்.
ஒருநாள் பாடம் சொல்லி வந்தபோது, ராமானுஜர் மவுனத்தில் ஆழ்ந்தார்.
அப்போது அவருடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டு ரத்தம் வந்தது. சீடர்கள் செய்வது அறியாது திகைத்தார்.
சிறிது நேரம் கழித்து மவுனம் கலைந்து, உடையவரே மவுனத்தில் உதிரம் சொட்டிய காரணத்தை விளக்கினார்.
சீர்திருத்தம் பலவற்றை சிறப்புடனே செய்தவராம்...
சீர்பெருமை பல பெற்ற சீர்மிகு ராமானுஜராம்...
(சீர்திருத்தம்)
வைணவராய்ப் பிறந்தாலும் வையகமே போற்றி நிற்கும்
வரதராஜன் தந்த வரம் ராமானுஜர் அவதாரம்!
குலத்தாழ்ச்சி இல்லாமல், குலப்பெருமை பேசாமல்,
குலகுருவாய் வந்திட்டவர், குலம் செழிக்க வாதிட்டவர்!
(சீர்திருத்தம்)
ஆழ்வார்கள் அருளிச் செய்த அழகு தமிழ்ப் பாசுரங்கள்
வடமொழியின் வேதத்திற்கு இணையெனவே வாதிட்டவர்!
திராவிடரின் வேதமென்றே திவ்ய பிரபந்தப் பாசுரத்தை
ஓதும்படி செய்திடவே இவ்வுலகில் தோன்றிட்டவர்!
(சீர்திருத்தம்)
திருக்கோவில் உள்ளேதான் நுழைந்திடவே முடியாத
தெருக்கோடி மக்களுக்கும் திருக்கரத்தை நீட்டியவர்!
தீண்டாமை எனச் சொல்லும் தீவினையை மாற்றிடவே
திருப்பெரும்புதூர் ஈன்றெடுத்த அவதார திருச்செல்வர்!
(சீர்திருத்தம்)!
-நெமிலி ஸ்ரீபாபாஜி பாலா
- வைணவத் திருக்கோவில் வழிபாடு மற்றும் சம்பிரதாயங்களை முறைப்படுத்தினார்.
- தாம் உருவாக்கிய சீர்த்திருத்தங்களையெல்லாம் ஓர் ஓலைச்சுவடியில் செவ்வனே பதித்தும் வைத்தார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டையில் ஸ்ரீமத் ராமானுஜர் சுமார் இருபது ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியுள்ளார்.
தொண்டனூரில் பல கோவில்களை செப்பனிட்டார்.
மேல்கோட்டையில் லட்சுமி நாராயணனுக்கு கோவில் கட்டி, ஆகமப்படி ஆராதனை செய்வதற்கு வழி வகுத்தார்.
செல்வப்பிள்ளை என்ற உற்சவ மூர்த்தியை டெல்லி பேரரசனிடமிருந்து மீட்டு வந்தார்.
கர்நாடகப் பகுதியில் பஞ்சநாராயணர்களுக்கு திருக் கோவில்கள் எழுப்பினார்.
விஷ்ணு பக்தியைப் பரப்ப உறுதுணையாக இருக்கும் பொருட்டு, விட்டல தவராயன் என்ற ஜைன மன்னனை விஷ்ணுவர்த்தனன் என்று பெயரிட்டு, வைணவ பக்தனாக மாற்றினார்.
பல வைணவ மடங்களை நிறுவி, தொடர்ந்து நாராயண சேவை செய்ய 52 பேரை நியமித்தார்.
ராஜமுடி உற்சவம், வைரமுடி உற்சவம் ஆகியவை நடைபெற வழிவகுத்தார்.
ஆயிரக் கணக்கான ஜைனர்கள், வைணவ மதத்தைப் பற்றி ஓராயிரம் கேள்விகள் எழுப்ப, தமது வாதத்திறமையால் அவர்களை தோல்வியுறச் செய்தார்.
அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தார் என அழைத்திடவும், அவர்கள் மற்ற எல்லோரையும் போல கோவில் உற்சவங்களில் பங்கு கொள்ளவும் சம உரிமைகள் வழங்கினார்.
திருநாராயணப் பெருமாளின் ஆராதனைகள் தொடர்ந்து செவ்வனே நடந்தேறும் பொருட்டு நியமனப்படி என்ற ஆக்ஞா பத்திரத்தை எழுதி வைத்தார்.
வைணவத் திருக்கோவில் வழிபாடு மற்றும் சம்பிரதாயங்களை முறைப்படுத்தினார்.
தாம் உருவாக்கிய சீர்த்திருத்தங்களையெல்லாம் ஓர் ஓலைச்சுவடியில் செவ்வனே பதித்தும் வைத்தார்.
மாருதியாண்டான் என்பவரை அதை ஏழு பிரதிகள் எழுதச் சொல்லி எம்பெருமானார் கட்டளையிட்டார்.
தம்மால் நியமிக்கப்பட்ட வைணவதாசர்களான திருவனந்தபுரதாசர், யதிராஜதாசர், மாலாகார தாசர், திருக்குறுங்குடி தாசர், வஞ்சிபுரம் தாசர், ஸ்ரீரங்கப்பட்டர், மன்னன் விஷ்ணுவர்த்தனன் ஆகிய ஏழு பேருக்கும் ராமானுஜர் என்று தம் கையப்பமிட்டு ஒவ்வொரு பிரதியைக் கொடுத்தார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையும் புனிதமும் மிக்க அந்த ஓலைச்சுவடியை மேல் கோட்டை தலத்தில் மாபெரும் பொக்கிஷமாக இன்றளவும் பாதுகாத்து வருகிறார்கள்.
- அடுத்து ஒன்பது நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டு, அவை தங்கச் செயின்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
- செயின்கள் அனைத்திலும், தங்கம் மீது வெள்ளை நிற கற்கள் இடம் பெற்றுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள ராமானுஜருக்கு 100 சவரன் தங்க திருவாபரணம் சேலத்தில் தயாரிக்கப்பட்டது.
ராமானுஜரின் 1000-வது திருநட்சத்திரம் திருநாளை முன்னிட்டு சென்னை, தாம்பரம் அழகிய மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபாவினர் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 100 பவுன் எடையில் தங்க திருவாபரணம் செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் சேலத்திலுள்ள நகை கடைகளில் திருவாபரணம் செய்யும் பணியை கொடுத்திருந்தனர்.
திருவாபரணம் தயாரிக்கும் பணி ஆறு மாதங்களாக நடந்து வந்தது.
அதன் பணி முடிவடைந்த நிலையில் சென்னை கைங்கர்ய சபா நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவாபரணத்தில் நான்கு டாலர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேற்புறமுள்ள டாலரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உபயநாச்சியார் சமேத தேவபெருமாள் காட்சி அளிக்கிறார்.
வலது புறம், இரண்டாவது டாலரில் நம்மாழ்வார், இடது புறம் மூன்றாவது டாலரில் குமுதவல்லி நாச்சியார், திருமங்கை ஆழ்வார், கீழ்புறம் நான்காவது டாலரில் திருக்கச்சி நம்பி அருள்பாலிக்கின்றனர்.
அவை நான்கிற்கும் நடுவே பவள கல் இடம் பெற்றுள்ளது.
அதன் கீழ் ராமானுஜர், திருக்கச்சி நம்பியிடம், தன் சந்தேகங்களை, பெருமாளிடம் கேட்டுச் சொல்லும்படி வினவிய சம்பவமும், அதற்கு பெருமாள் அளித்த பதில்களை விளக்கும் வகையில், பெருமாள், ராமானுஜருக்கு அருளிய, ஆறு வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
அடுத்து ஒன்பது நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டு, அவை தங்கச் செயின்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
செயின்கள் அனைத்திலும், தங்கம் மீது வெள்ளை நிற கற்கள் இடம் பெற்றுள்ளன.
திருவாபரணம், சேலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை எடுத்து வரப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ராமானுஜருக்கு அந்த திருவாபரணம் சாத்துபடி செய்யப்பட்டது.
- கவிஞர் வாலி “ராமானுஜய காவியம்” எழுதியுள்ளார். வானதி பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது.
- ராமானுஜர் பெயரில் திருப்பதியில் ஒரு புஷ்கரிணியை அவரது சீடர் அனந்தாழ்வார் ஏற்படுத்தினார்.
* ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தன்று காஞ்சீபுரம் சாலைக்கிணறில் உள்ள ராமானுஜர் கோவிலில் சிறப்புப் பூஜை செய்தால் கால சர்ப்ப தோஷம் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.
* ராமானுஜரின் புரட்சிகரமான சீர்திருத்தங்களை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய ராமானுஜர் பற்றிய வரலாறு தொடராக தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. வைணவ வேத விற்பன்னர்களிடம் அந்த தொடர் மிகுந்த ஆதரவைப் பெற்றது. அவர்கள் கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
* கவிஞர் வாலி "ராமானுஜய காவியம்" எழுதியுள்ளார். வானதி பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது.
* ராமானுஜர் பெயரில் திருப்பதியில் ஒரு புஷ்கரிணியை அவரது சீடர் அனந்தாழ்வார் ஏற்படுத்தினார். இப்போதும் அந்த புஷ்கரிணி பயன்பாட்டில் உள்ளது.
* ராமானுஜர் அவதரித்ததால் ஸ்ரீபெரும்புதுரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் ஆலயம் நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே இத்தலத்தில் சொர்க்க வாசல் என்று எதுவும் இல்லை.
* ராமானுஜரின் நீண்ட ஆயுட்காலத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் அமைந்தார்கள். அவர்களில் பலர் அவருடைய விக்கிரகங்களை உருவாக்கி பல்வேறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
- இன்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடந்த பிறகே ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறுகிறது.
- ஸ்ரீரங்கம் கோவிலை ஸ்ரீராமானுஜரே நிர்வகித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரிடம் ஐக்கியமான ஸ்ரீராமானுஜர் இன்றும் உடலாலும் வாழ்கிறார்.
இன்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடந்த பிறகே ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலை ஸ்ரீராமானுஜரே நிர்வகித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.
ஸ்ரீராமானுஜருக்கு ஆயுள் 200 ஆண்டுகள் என்றும், ஆனால் அவர் தனது 120-வது வயதில் சித்தி அடைந்து விட்டதால், மீதமுள்ள 80 ஆண்டுகள் கழிக்க அடுத்த பிறவியில் ஸ்ரீ மணவாள மாமுனிகளாக அவதாரம் எடுத்து 80 ஆண்டு காலம் வாழ்ந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீராமானுஜர் அவதரித்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வைணவத்தில் மட்டுமின்றி ஆன்மிக உலகில் அரிய புரட்சிகளை உருவாக்கிய ஈடு, இணையில்லாத அம்மகானை மனதார வணங்கி பலன்கள் அடைவோம்.
- சமயப் புரட்சி செய்த ராமானுஜர் ஒப்பற்ற சமூக சீர்திருத்தவாதி.
- சமய சித்தாந்தங்களை மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொணர்ந்து, அனைவரும் அவற்றை எளிதாகக் கடைப்பிடிக்கப் பாடுபட்டவர்.
சமயப் புரட்சி செய்த ராமானுஜர் ஒப்பற்ற சமூக சீர்திருத்தவாதி.
சமய சித்தாந்தங்களை மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொணர்ந்து, அனைவரும் அவற்றை எளிதாகக் கடைப்பிடிக்கப் பாடுபட்டவர்.
ஆண்டவனின் சன்னி தானத்திலும் கர்ப்ப கிரகத்திலும் வடமொழியுடன் சேர்ந்து தமிழ் வேதமாகிய திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் ஓதுவதற்கு ஏற்பாடு செய்தார்.
பெண்களுக்கு ஆண்களுக்குச் சரி நிகரான அந்தஸ்து அளித்து, அவர்களையும் சீடர்களாக ஏற்றுக்கொண்ட முதல் சமயத்தலைவர் ராமானுஜரே.
முஸ்லிம் அரச குமாரியை, மதம் மாறாமலேயே, நாராயண மூர்த்திக்குத் திருமணம் செய்து வைத்ததாகச் சடங்குகளை உருவாக்கி, இஸ்லாமியருடன் சமய இணக்கம் காண வழி வகுத்தவர் ராமானுஜர்.
இவ்வாறு பல துறைகளிலும் புரட்சிகளைச் செய்த மகான் உடையவர் ஒருவரே என்றால் மிகையாகாது.
இஸ்லாமியர்களுடன் இணக்கம்
மேலக்கோட்டையில் திருநாராயண சுவாமியின் உற்சவ மூர்த்தியான செல்வப்பிள்ளையை மணந்து கொண்ட துருக்க நாச்சியாருக்கு (பீபி நாச்சியாருக்கு) தனிச் சந்நிதி உள்ளது.
இதைப் போன்றே திருவரங்கம் அரங்கநாதர் கோவிலிலும், வேறு பல பிரபலமான பெருமாள் கோவில்களிலும் துருக்க நாச்சியாருக்குச் சந்நிதிகள் உண்டு.
திருவரங்கம் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசித் திருவிழாவில், பகல் பத்துத் திருநாளில் உற்சவப் பெருமாள் முஸ்லிம் இனத்தவரைப் போல லுங்கி கட்டிக் கொண்டு இந்தத் துருக்க நாச்சியார் சந்நிதிக்குச் சென்று அவருக்குக் காட்சி தரும் வழக்கம் ராமானுஜர் காலத்திலிருந்து இன்று வரையிலும் தொடர்ந்து வருகிறது.
இவ்விதம் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்குமிடையே இணக்கச் சூழலை உருவாக்கிய ராமானுஜரின் ஞானப்பார்வை, வெறும் சமயச்சடங்காக மட்டும் கூனிக் குறுகியிராமல் பரந்த சமுதாயத்தின் மீது உண்மையான தாக்கம் செலுத்தியிருந்தது.
- "ஆம் முதல்வன் இவன்" என்று ஸ்ரீ ஆளவந்தாராலும்
- "எதிராஜர்" என்றும், "ராமானுஜ முனி" என்றும் காஞ்சிப் பேரருளாளனாலும் அழைக்கப்படுகிறார்.
* "இளையாழ்வார்" என்று பெரிய திருமலை நம்பிகளாலும்
* "பூதபுரீசர்" என்று ஆதிகேசவப் பெருமாளாலும்
* "ஆம் முதல்வன் இவன்" என்று ஸ்ரீ ஆளவந்தாராலும்
* "எதிராஜர்" என்றும், "ராமானுஜ முனி" என்றும் காஞ்சிப் பேரருளாளனாலும்
* "உடையவர்" என்று பெரிய பெருமாளாலும்
* "எம்பெருமானார்" என்று திருக்கோட்டியூர் நம்பிகளாலும்
* "திருப்பாவை ஜீயர்" என்று பெரிய நம்பிகளாலும்
* "லட்சுமணமுனி" என்று திருவரங்கப் பெருமாளரையாலும்
* "சடகோபன் பொன்னடி" என்று திருமாலையாண்டனாலும்
* "ஸ்ரீ பாஷ்யகாரர்" என்று கலைமகளாலும்
* "தேசிகேந்திரன்" என்று திருவேங்கடமுடையானாலும்
* "கோவில் அண்ணன்" என்று கோதை நாச்சியாராலும் ராமானுஜர் அழைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்