search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருக்கோளூர் பெண்மணி
    X

    திருக்கோளூர் பெண்மணி

    • ஸ்ரீராமானுஜர் ஒருமுறை மதுரகவி ஆழ்வாரின் ஊராகிய திருக்கோளூருக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் எதிரே வந்தாள்.
    • அந்த சாமான்யப் பெண் சொல்ல சொல்ல ராமானுஜருக்கு கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது.

    ஸ்ரீராமானுஜர் ஒருமுறை மதுரகவி ஆழ்வாரின் ஊராகிய திருக்கோளூருக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் எதிரே வந்தாள்.

    அவள் ஸ்ரீ ராமானுஜரைக் கண்டதும் தண்டனிட்டு நின்றாள்.

    "அம்மா, ஆழ்வார் பாசுரத்தில் கூறப்படும் திருக்கோளூர் எங்கே இருக்கிறது? நீ அங்கிருந்துதான் வருகிறாயா?"

    "முயல் புழுக்கை வயலிலே கிடந்தென்ன, வரப்பிலே கிடந்தென்ன? ஞானமில்லாத நான் கோளூரில் இருந்தாலென்ன வெளியே இருந்தால் என்ன" என்று கூறிய அவள், ராமானுஜரைப் பார்த்து மிகவும் உணர்ச்சி மயமாகிப் போனவள் போல் பேசினாள்.

    "அகம் ஒழித்துவிட்டேனோ விதுரைப்போலே

    தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப்போலே

    பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப்போலே

    அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே

    தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாள் போலே

    ஆயனை வளர்த்தேனோ யசோதையாள் போலே

    அவல் பொரியை ஈந்தேனோ அகஸ்தியரைப்போலே

    ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப்போலே

    இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார் போலே

    வழி அடிமை செய்தேனோ இளையாழ்வார் போலே

    அக்கரையில் விட்டேனோ குகப்பெருமாள் போலே

    கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப்போலே...

    அந்த சாமான்யப் பெண் சொல்ல சொல்ல ராமானுஜருக்கு கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது.

    Next Story
    ×